யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ள நிலையில் நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்த அரச சொத்துக்களை விற்பனை செய்ய வேண்டிய அவசியம் இல்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அவரின் உத்தியோகபுர்வ இல்லத்தில் ஜப்பான் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சொத்துக்களை வைத்து நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்ல வேண்டும். மாறாக இந்த அரசாங்கத்துக்கு நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்வது எப்படிப் போனாலும், மக்களின் பசியைப் போக்குவதற்கே முடியாமல் போயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -