மைத்திரியும் தமிழர்களை ஏமாற்றும் தலைவர்தான் என்கிறார்-சிவாஜிலிங்கம்

டக்கு – கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருவதாக கூறி தமிழ் மக்களை ஏமாற்றும் இறுதித் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணப்பட வேண்டும் என வட மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த நாட்டின் சகல அரசியல் தலைவர்களும் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றியுள்ளனர். இதன்பிறகு இந்த நிலைமை வேண்டாம்.

ஜனாதிபதியும் தற்போதைய அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு தேர்தலின் போது அளித்த வாக்குறுதிக்காகவே தமிழ் மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.

இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறுமாயின், அது குறித்து ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு மீண்டும் நினைவுபடுத்திக் கொடுப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -