ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் டெங்கொழிப்பு வேலைத்திட்டம்.

எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்தில் பெருகிவரும் டெங்கு நோயினை கட்டுப்படுத்துவதற்காக வேண்டி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் டெங்கொழிப்பு வேலைத்திட்டமொன்று நேற்று (12) ம் திகதி இடம்பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச சபையின் உப தவிசாளரும் ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவருமான யூ.எல்.அஹமட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் வேலைத்திட்டத்தில் டெங்கு நோய் பரவக்கூடிய இடங்களை சுத்தம் செய்து அந் நோய் பற்றியும் அதனால் ஏற்படும் விபரீதங்கள் பற்றியும் மக்களுக்கு விழிப்பூட்டல் செய்யப்பட்டது.
இவ் வேலைத்திட்டத்தில் கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஏ.கே. ஜஃபர், யூ.எல்.எம்.ஜின்னா, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.ஐ.எம்.றியாஸ், ஐ.எல்.பதுர்தீன் ஆகியோர்கள் கலந்து கொண்டு இவ் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்புக்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -