அஸ்ஸலாமு அலைக்கும்
இன்று (13/01/2019) அதிகாலை 1:30 மணியளவில் மல்வான, ரக்ஸபான ஜும்மா பள்ளி வாசலுக்குச் சொந்தமான காணியில் அமைந்துள்ள நான்கு கடைகள் தீயில் முற்றாக சேதமுற்றமை தொடர்பாக பல் வேறு செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன.
இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களின் படி கடைத்தொகுதியின் பின்னால் இருந்த சிறிய குப்பை மேட்டில் ஏற்பட்ட தீ விரைவாகப் பரவியதால் மேற்படி கடைகள் எரிந்தன என்று தெரிய வந்துள்ளது.
எனவே இத் தீ விபத்து இன ரீதியாக மேற் கொள்ளப் பட்ட தாக்குதல் என்ற ரீதியில் செய்திகளைப் பரப்புவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
மேற்படி தீ மேலும் பரவாமல் இருக்க கடுமையாகப் போராடிய ஊர் ஜமா அத்தினருக்கும் பொலிஸ் மற்றும் தீயணைப்புப் படையினருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
நன்றி
Mohamed Nizous,
Secretary,
Board of Trustees
Raxapana Jumma Masjid)