மலையக அரசியல் இடைவெளியே காரணம்

நோட்டன் பிரிட்ஜ்  எம் கிருஸ்ணா-

ஆயிரம் ரூபா சம்பளம் முதல் அடிப்படை மலையக பிரச்சினைகள்பலவற்றுக்கு மலையக அரசியல் இடைவெளியே காரணம் 
திலகராஜ் எம்.பி 
ன்றைய நிலையில் மலையகத்தின் பிரதான அரசியல்பிரச்சினையாக பேசுபொருளாகியிருப்பது ஆயிரம் ரூபா அடிப்படைசம்பளவிவகாரம்.இது தவிர இன்னும் பல அடிப்படை அரசியல்பிரச்சினைகள் உண்டு. அவற்றுக்கு தீர்வுகாண சமகால மலையகஅரசியல் செயற்பாடுகளுக்கும் மலையகத்தின் கல்விசார்சமூகத்துக்கும் இடையிலான இடைவெளி பிரதான காரணமாகும் எனதமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரலியா மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு தேயிலை வருகையின் 150 ஆண்டு கால வரலாற்றில்அதுசார்ந்த மக்கள் சமூகத்தின் பக்கத்தை பிரதிபலிக்கும் வகையில்தொகுக்கப்பட்ட “இலங்கையில் தேயிலைப் பெருந்தோட்ட சமூகம்” நூலின் பிரதிகளை மலைநாட்டு புதிய கிராமங்கள் உள்கட்டமைப்புசமுதாய அபிவிருத்தி அமைச்சு கொள்வனவு செய்து பாடசாலைமற்றும் பொது நூலகங்களுக்கு வழங்கிவைக்கும் நிகழ்வு அண்மையில்ஹட்டன் பூல்பேங்க் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில்நடைபெற்றது. அமைச்சரின் ஆலோசகர் எம்.வாமதேவன்தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர்கலாநிதி.பொ.சுரேஷ், நூலின் தொகுப்பாசிரியர்களில் ஒருவரானபேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி.இரா.ரமேஷ்,கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் விரிவுரையாளர்அகிலன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்டுஉரையாற்றியபோதே பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ்மேற்படி கருத்தினைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்துஉரையாற்றுகையில்,
இன்று இலங்கைக்கு தேயிலையின் வருகையின் 150 ஆண்டு காலவரலாற்றில் தேயிலை தொழில் துறையுடன் சம்பந்தப்பட்ட ஏனையதரப்பினர் தமது பதிவுகளை நூலாக்கம் செய்துள்ள நிலையில், அந்ததொழில் துறை சார்ந்த தொழிலாளர் சமூகத்தின் பக்கத்தில் செய்யும்பதிவுகளாகவே இந்த நூல் தொகுக்கப்பட்டதாகதொகுப்பாசிரியர்களில் ஒருவரான கலாநிதி.ரமேஷ் குறிப்பிட்டார்.அவர் கூறும் ஏனைய தரப்புகளான முலாளிமார் சம்மேளனம்,தேயிலை வர்த்தக முகவர் சம்மேளனம், கொள்கை வகுப்பாளர்களின்ஒன்றியம் போன்றன அவர்களது இலங்கைத் தேயிலையுடனானவகிபாகத்தை ஆங்கிலத்தில் பதிவு சர்வதேசத்தின் வாசிப்புக்குகொடுத்திருக்கும்போது நாம் தமிழில் எழுதி நாமே வாசித்துக் கொள்ளஇப்போதுதான் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். எனவே இன்றுசர்வதேசம் தெரிந்து கொண்டுள்ள இலங்கையின் தேயிலை பற்றியதகவல்கள் முதலாளிகளின் தேயிலை, முகவர்களின் தேயிலை ,தரகர்களின் தேயிலையாகவே உள்ளது. தொழிலாளர்களின் தேயிலைதொடர்பான பக்கத்தை நாம் தமிழில் எழுதி அதனை வாங்குவதற்குநம்மவர்களையே வற்புறுத்த வேண்டி இருக்கிறது.

எது எவ்வாறு எனினும் இன்று தேயிலைத் தொழில் துறையின்தொழிலாளர் பக்கத்தை பிரதிபலிக்கும் வகையில்அச்சிடப்பட்டிருக்கும் இந்த நூல்பிரதிகளின் பெறுமதி எட்டு லட்சம் எனகூறப்பட்டது. அதில் ஒரு லட்சம் ரூபா பெறுமதியானவற்றைஅஅமைச்சர் திகாம்பரம் தமது அமைச்சின் ஊடாக கொள்வனவுசெய்து பாடசாலை நூலகங்களுக்கு வழங்க முன்வந்துள்ளமையைப்பாராட்ட வேண்டும். எனினும், அதனைப் பெற்றுக் கொள்ள இந்தபாடசாலை சமூகம் இன்னும் முழுமையாக தயாராகவில்லைஎன்பதையே இங்கே வருகை தந்துள்ள அதிபர்களின் எண்ணிக்கைகாட்டுகிறது. சுமார் 25 பாடசாலைகள் அழைக்கப்பட்ட போதும்பத்துக்கு குறைவான அதிபர்களையே காண முடிகிறது. ஏற்கனவேபல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மாணவர்களுக்குமடிக்கணினிகளைப் பெற்றுக்கொடுக்க அமைச்சர் திகாம்பரம்முன்வந்து அதற்கான விபரங்களை பாடசாலை அதிபர்களிடம்கோரியபோது அதற்கு முறையான பின்னூட்டம் கிடைக்கவில்லை எனஅமைச்சரின் ஆலோசகர் எம்.வாமதேவன் தனது உரையில் வருத்தம்தெரிவித்தார். எனவே இங்கு சமூகத்திற்கு பகிரப்படும் பொருள் பற்றியபிரச்சினை இல்லை. ஆள் பற்றிய பிரச்சினையே இருக்கிறது.சிலவேளை மலைநாட்டு புதிய கிராம அபிவிருத்தி அமைச்சர்அண்ணன் திகா வாக இல்லாமல் தம்பி சேராக இருந்திருந்தால்,மடிக்கணிணியாக அல்லாது மண்வெட்டியாக இருந்தால் கூடவரிசையில் வந்து நிற்கும் கலாசாரம் ஒன்று மலையகத்தில்நிலவுகிறது. இதனைப் பெற்றுக் கொடுப்பது மத்திய அரசாங்கஅமைச்சா, மத்திய மாகாண அமைச்சா என்பதெல்லாம் கூட இந்தகலாசாரத்தில் செல்வாக்கு செலுத்துகின்றது. இந்த நிகழ்வுகள்நடைபெறும் இடம் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையமா,காங்கிரஸ் தொழிலாளர் மன்றமா, காங்கிரஸ் தொழிநுட்ப நிலையமாஎன்பதில் எல்லாம் இந்த கல்வி சமூகத்தினரின் பங்குபற்றுனர்எண்ணிக்கை தீர்மானிக்கப்படுவதாக உள்ளது.

இந்த நிலைமைதான் மலையகத்தின் அரசியல் இடைவெளியாகவும்உள்ளது. இன்று தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம்ஆயிரம் ரூபாவாக இருக்கவேண்டும் என்பது கூட தமிழர்களால்மட்டுமே நடாத்தப்படும் போராட்டமாக அமைவது கூட திட்டமிட்டுதிணிக்கப்பட்டதுதான். தேயிலைத் தொழில் துறையின் ஐம்பதுசதவீதமான பக்கம்தான் தொழிலாளர் சார்ந்துள்ளது. அதாவதுதேயிலையை வளர்த்து தொழில் சாலைக்கு கொண்டு செல்லப்படும்வரைதான் அது தொழிலாளர்கள் கையில் உள்ளது. அதற்கு பின்னதானஅந்த உற்பத்தி பொருளின் சந்தைப்படுத்தலில், ஏற்றுமதியில்,வருமானத்தில் தொழிலாளர் சமூகத்தின் வகிபாகம் எதுவும் இல்லை.அவ்வாறே நாம் இந்த 150 ஆண்டு காலமும் வளர்க்கப்பட்டிருக்கிறோம்.ஆனால், தேயிலை தொழில் துறை எங்களுடையது என்றஉரிமையோடு வீதியில் இறங்கிப் போராடுகிறோம்.அந்த போராட்டம்ஏன் தமிழர்களால் மாத்திரம், தமிழில் மாத்திரம் ஒலிக்க வேண்டும்?.தேயிலை தொழில் துறை வீழ்ச்சி அடைந்தால், அதுசார்ந்த அனைத்துதரப்பும் போராட வேண்டும். ஆனால், இலங்கையில் நடப்பதுஅப்படியல்ல. அதற்கான வரலாற்றுப் பின்புலத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டியுள்ளது. நமது தொழிலாளர்பக்க பிரச்சினைகளைஆங்கில, சிங்கள மொழியில் வெளிப்படுத்த வேண்டியவர்களாகஉள்ளோம்.ஆயிரம் ரூபா சம்பள விவகாரம் இந்த நாட்டின் கொள்கைவகுப்பாளர்களை, பொருளாதார நிபுணர்களை சென்றடையவேண்டும். அதனையும் தாண்டி சர்வதேசத்தை சென்றடையவேண்டும். அதற்கு இதுபோன்ற தொழிலாளர் பக்க தொகுப்பு நூல்கள்ஆங்கிலத்திலே வெளிவரவேண்டும்.மலையகத் தமிழர் சமூகத்தில்சாதாரண பொதுமக்களும், அரசியல் சமூகமும், கல்விசார் சமூகமும்சந்திக்கின்ற புள்ளியாக இத்தகைய நூல்வெளியீடுகளும் உரையாடல்வெளிகளும் அமைய வேண்டும்.அத்தகைய உரையாடலின்இடைவெளியே இன்றைய மலையக அரசியலினதும்இடைவெளியாகும். இந்த இடைவெளி நிரப்பப்படாதவரை இன்னும் 150ஆண்டுகள் ஆனாலும் மலையகப் பிரச்சினைகள் தொடர்வதாகவேஅமைந்து விடும என்றும் தெரிவித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -