அந்த தமிழ் சகோதரர் வன்னியில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஜெயந்தன் படையணியில் இருந்த போது அவர் இரண்டு கால்களையும் ஒரு கண்ணையும் இழந்துள்ளர்.
தற்போது இவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பிரதேசத்தில் சைக்கிள் திருத்தும் சிறிய கடை ஒன்றை நடாத்தி வருவதாகவும் அவருக்கு ஒரு சிறிய காற்றழுத்தியும் சைக்கிள் உதிரிப்பாகங்களும் தேவைப்படுகின்றது எனவும் இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருப்பதாகவும் இந்த உபகரணங்கள் இருந்தால் தனது தொழிலை சிறப்பாக செய்து அதனைக் கொண்டு அவரின் வாழ்வதாரம் மேம்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைப் பார்த்த காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தனது கடந்த மாத நகர சபை சம்பளத்தில் அவர் உதவி கோரிய அந்த உபகரணங்களை வாங்கிக் கொண்டு அவரின் வீடு தேடிச் சென்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (27.01.2019) அந்த தமிழ் சகோதரருக்கு ஒப்படைத்தார்.
இதன் மூலம் மதம் இனம் இவற்றுக்கப்பால் மனித நேயம் பார்க்கப்பட்டுள்ளது.
இந்த உதவியை அந்த தமிழ் சகோதரருக்கு செய்த முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் சிப்லி பாறூக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.