நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு காத்தான்குடி பிரதேசத்தில், இரண்டாம் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று நான்கு நகரசபை உறுப்பினர்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக காத்தான்குடி நகரசபையில் பதவி வகித்து வருகின்றது. கடந்த தேரதலை தொடர்ந்து பிராந்திய உயர்மட்ட சபையின் ஆலோசனைக்கு அமைவாக நகரசபை உறுப்பினர்களாக MBM பிர்தௌஸ் நளீமி,சகோதரர் இல்மி அஹமட் லெப்பை மற்றும் சகோதரி ரிபாயா, சகோதரி றகிபா ஆகியோர் நகரசபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். இதில் சகோதரர் அஷ்ஷெய்க் பிர்தௌஸ் நளீமி அவர்களின் இடத்திற்கு தற்பொழுது சபில் நளீமி நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய நகரசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் சகோதரர் சபீல் நளீமி அவர்கள் NFGGயின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவர் என்பதுடன் கடந்த காலங்களில் NFGGயின் சிரேஷ்ட பதவிகளையும் வகித்து வந்துள்ளார். குறிப்பாக கடந்த காலங்களிலும் காத்தான்குடி நகர சபையில் NFGGயின் பிரதிநிதியா கடமையாற்றியுள்ளார். இவர் காத்தான்குடி பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பொதுச்செயலாளராக நீண்ட நாட்கள் கடமையாற்றி வந்துள்ளதுடன் முக்கிய சமூகப்பொறுப்புக்களை ஏற்று கடமையாற்றி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.