ஏ.எம்.றிகாஸ்-
நெதர்லாந்து நாட்டின் சீமாட்டி நெல்லி நீரோப் வழங்கிய நிதியுதவியில் தைக்கப்பட்ட பாடசாலை சீருடைகளை றூகம் சுபைர் ஹாஜியார் வித்தியாலய மாணவர்களுக்கு மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் டாக்டர் எஸ்எம்எம்எஸ். உமர்மௌலானா கையளிப்பதைப்படத்தில் காணலாம்.
கல்வி வலயத்தின் சமாதானக்கல்வி மற்றும் சமூக நல்லிணக்க இணைப்பாளர் எம்ஜிஏ நாஸர், பாடசாலை அதிபர் ரீஎம்எம் கஸ்ஸாலி சாகிப் மற்றும் ஆசிரியர்களும் அருகில் காணப்படுகின்றனர். ஒரு மாணவருக்கு தலா இரண்டு சீருடைகள் வழங்கப்பட்டன. நெதர்லாந்து நாட்டின் சீமாட்டி நெல்லி நீரோப் ஏறாவூர் - விசேட பாடசாலை மற்றும் றூகம் வித்தியாலயம் அகிய பாடசாலைகளை கடந்த மூன்று வருடகாலமாக போஷித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.