🇱🇰ஈ- ஹெல்த் அட்டை பெப்ரவரியிலிருந்து🇱🇰


லங்கையிலுள்ள 21 மில்லியன் மக்களுக்கும் ஈ- ஹெல்த் அட்டையை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென, சுகதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஈ- ஹெல்த் அட்டையை வழங்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்துக்கொண்டப் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

6 மாதங்களுக்குள் இந்த அட்டை அனைத்து மக்களுக்கும் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியாவின் ஆந்திர பிரதேசத்திலுள்ள நிறுவனம் ஒன்றே இலங்கையில் இந்த அட்டையை வழங்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இதன்மூலம் யாராவது ஒரு நோயாளியின் நோய் தொடர்பான முழுமையான அறிக்கை இதில் உள்ளடக்கப்படும் என்பதால், குறித்த நபர் நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலுமுள்ள வைத்தியரிடம் விரைவாக சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி உலக சுகாதார அமைப்பின் 71ஆவது மாநாட்டையொட்டி, ஜனாதிபதி தலைமையில் கொழும்பு தாமரைத் தடாகத்தில் ஈ-ஹெல்த் அட்டை இலங்கையில் முதன்முதல் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -