அமீர் அலியினால் அன்பளிப்பு செய்யப்பட்ட தெரு மின்விளக்குகளை பொருத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்.

அகமட் எஸ். முகைடீன்-
ல்முனை மாநகர பஸார் பிரதேசத்தை ஒளியூட்டி அழகுபடுத்துவதற்காக முன்னாள் பிரதி அமைச்சர் ஹரிஸின் வேண்டுகோளுக்கு அமைவாக அவரது சகோதரரான பிரபல தொழிலதிபர் எச்.எம்.எம் அமீர் அலியினால் கல்முனை மாநகர சபைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட 18 இலட்சம் ரூபா பெறுமதியான எல்.ஈ.டி தெரு மின்விளக்குகளை பொருத்தும் வேலைத்திட்டம் இன்று (04) ஆரம்பித்துவைக்கப்பட்டது.
கல்முனை மாநகர பஸார் பிரதேசத்தில் மிகப் பிரகாசமான தெரு மின்விளக்குளை பொருத்தி அப்பிரதேசத்தை அழகுபடுத்துவதற்கு அமீர் அலி 18 இலட்சம் ரூபா பெறுமதியான எல்.ஈ.டி தெரு மின்விளக்குகளை கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம் றகீபிடம் கையளித்திருந்தார். குறித்த 23 தெரு மின்விக்குகளும் கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலை சுற்றுவாட்டத்திலிருந்து ஆரம்பித்து மக்கள் வங்கி சுற்றுவட்டம் மற்றும் பொலிஸ் நிலைய வீதி ஊடாக வெஸ்லி உயர்தர பாடசாலை சுற்றுவாட்டம் வரையிலான சுற்றுவட்ட பிரதேசத்திற்கு பொருத்தப்படுகின்றன.

இவ்வாரம்ப நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.எம். சத்தார், சட்டத்தரணி றோசன் அக்தர், ஏ.எம். பைறூஸ், எம்.எஸ்.எம். நிசார் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா ஆகியோர் கலந்துகொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -