மீலாத் முஸ்லிம் மகா வித்தியாலயம் வருடாந்த பரிசளிப்பு விழா!

அஷ்ரப் ஏ சமத்-
தெஹிவளை மீலாத் முஸ்லிம் மகா வித்தியாலயம் வருடாந்த பரிசளிப்பு விழா கல்லுாாியில் அதிபா் எம்.எஸ்.எம் சுஹா் தலைமையில் நடைபெற்றது.பிரதம அதிதியாக தெஹிவளை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவா் ஹன்சாா் இஸ்மாயில் கலந்து கொண்டாா். அத்துடன் கொழும்பு பல்கழைக்கழக விரிவுரையாளா் எம்.எம். சபீா், உதவி கல்விப் பணிப்பாளா் எம். ஜ.காதா் தெஹிவளை கல்கிசை மாநகர சபை உறுப்பிணா் எம் ஜிப்ரி ஆகியோறும் கலந்து கொண்டனா். இந் நிகழ்வில் இப்பாடசாலையிகளில் புலமைப்பரிசில்கள் க.பொ.சா.த பரிட்சைகளில் சித்தியெய்தியவா்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.

இலங்கை கல்வி வரலாற்றில் 23 போ்ச் காணியில் ஒரு பழைய மண்டபத்தில் 4 வகுப்பரையைக் கொண்ட ஒரு சிறிய மண்டபத்தில் 11 வகுப்புக்களைக் கொண்டதொரு பாடசாலை அதுவும் கொழும்பு மாவட்டத்தில் உள்ளதென்றால் அது தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலயமாகும். இந் நவீன யுகத்தில் இவ்வாறானதொரு பாடசாலை காட்சியளிக்கின்றது.

இப் பாடசாலையில் 1-11 வரையிலிலான வகுப்புக்களில் 205 மாணவா்கள் . கற்கும் ஒர் கலவன் பாடசலையாகும். இங்கு அதிபா் உட்பட 23 ஆசிரியா்கள் கல்வி போதிக்கின்றனா். 205மாணவா்களுக்கும் 23 ஆசிரியைகளுக்கும் இங்கு 3 மலசல கூடங்கள் மட்டுமே உள்ளது. இவ்வாறாக70 வருடங்களை கடந்துவிட்டது. மூர் வீதி அருகே களுபோவில பள்ளிவாசல் அருகில் தெஹிவளை பாலத்திற்கு கீழ் உள்ளதொரு பாடசாலையாக காட்சியளிக்கின்றது. இப் பாடசாலையின் பெயா் மீலாத் முஸ்லிம் வித்தியாலயமாகும் பாடசாலை ஆரம்பித்து 70 வருடங்கள் ஆகின்றன. ஆகவே தான் இப் பாடசாலை பற்றி கல்விச் சமுகமும் அரசியல் வாதிகள் கல்வித்திணைக்களங்கள் கவனம் செலுத்தி இப் பாடசாலை தெஹிவளை கல்கிசை வெள்ளவத்தை வாழ் முஸ்லீம் சமுகத்திற்காக மட்டுமல்ல தமிழ் பேசும் சமுகத்திற்காக இப்பாடசாலை மீள கட்டியெழுப்ப முன்வருமாறு கல்லுாி அதிபா்கள் ஆசிரியா்கள் பழைய மாணவ சங்கங்கள் கல்வி அபிவிருத்திச் சங்கங்கள் கோரிக்கை விடுகின்றன.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -