பிறந்த மண்ணுக்கு சேவையாற்றும் வேட்கையுடன் செயற்பட்டவர் ரஹ்மான்; மு.கா.செயலாளர் நிஸாம் அனுதாபம்


அஸ்லம் எஸ்.மௌலானா-
ல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் இசட்.ஏ.எச்.ரஹ்மான் அவர்களின் திடீர் மறைவு தனக்கு பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முன்னாள் முதல்வருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் பரிசோதகரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான இசட்.ஏ.எச்.ரஹ்மானின் மறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

இசட்.ஏ.எச்.ரஹ்மான் அவர்கள், கட்சி அரசியலுக்கு அப்பால் என் மீது பெரும் அன்பும் மரியாதையும் வைத்திருந்த ஒரு நண்பராவார். கல்முனை மாநகர சபையில் நாங்கள் இருவரும் அங்கம் வகித்த காலத்தில் மட்டுமல்லாமல் அதற்கு முன்பிருந்தே தனிப்பட்ட முறையில் நட்பாக பழகி வந்திருக்கிறோம்.

அதேவேளை கல்முனை மாநகர சபையில் நான் முதல்வராக பதவி வகித்தபோது அவர் மாற்றுக்கட்சி உறுப்பினராக இருந்தபோதிலும் கூட மிகவும் நெருக்கடியான கட்டங்களில் எனக்கு விசுவாசமாகவும் பக்கபலமாகவும் இருந்ததை என்னால் மறந்து விட முடியாது.

பொதுவாக மருதமுனை மண்ணில் பிறந்தவர்கள் என்னுடன் மிகவும் அன்பு பாராட்டுபவர்களாக இருப்பது வழமையாகும். அந்த மண் வாசனைக்கேற்ப ரஹ்மானும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் என்னுடன் மிகவும் நட்புடன் பழகி வந்தார்.
தான் பிறந்த மண்ணுக்கு முடிந்தளவு சேவையாற்ற வேண்டும் என்கின்ற வேட்கை அவரிடம் காணப்பட்டது. அதற்காக நேர, காலத்தையும் பொருளாதாரத்தையும் செலவிடுகின்ற ஒருவராக அவர் திகழ்ந்தார்.

துணிவு, திறமை, செயலூக்கம் நிறைந்த இசட்.ஏ.எச்.ரஹ்மான் அவர்களின் திடீர் மறைவு எமது பிரதேசத்திற்கு பெரும் இழப்பாக அமைந்திருக்கிறது.

இந்நிலையில் ரஹ்மான் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு தைரியத்தையும் சக்தியையும் வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
மேலும், இறையடி சேர்ந்திருக்கின்ற ரஹ்மான் அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைக்க வேண்டும் எனவும் பிரார்த்திக்கிறேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -