சமுர்த்தி திட்டம் தங்கிவாழ்பவர்களை இல்லாமலாக்கிமுயற்சியாளர்களை உருவாக்குகின்றது





 – அம்பாறை மாவட்ட சமுர்த்திபணிப்பாளர் சப்றாஸ்-

றியாத் ஏ. மஜீத்-
றுமையின் பாதிப்பை மாணவர்கள் உணராமல் கல்வியைதொடர்வதற்காகவே சமுர்த்;தி சிப்தொற கல்விப் புலமைப் பரிசில்வழங்கப்படுகின்றது என அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸ் தெரிவித்தார்.
சமுர்த்தி சிப்தொற புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வும், சமுர்த்திஉத்தியோகத்தர்கள், சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர்கள்கௌரவிப்பு நிகழ்வும் நேற்று (04) செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருதுபிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக சிரேஷ்ட தலைமைப்பீட சமுர்த்திமுகாமையாளர் ஏ.ஆர்.எம். சாலிஹ்யின் நெறிப்படுத்தலில் பிரதேசசெயலாளர் ஐ.எம்.றிகாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்குஅம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்றாஸ் பிரதமஅதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சமுர்த்தி முகாமையாளர்களான ஏ.எல்.யூ.ஜூனைதா,எம்.எஸ்.எம்.மனாஸ், ஏ. கபூர், சமுர்த்தி வலய உதவி முகாமையாளர்ஏ.எம்.எம்.றியாத், சமுர்த்தி சமூகப் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்எம்.எம்.றசீட், சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்எம்.சஹாப்தீன், தொழிலதிபர் எம்.ஜூனூத் உள்ளிட்ட சமுர்த்திஅபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படைஅமைப்புக்களின் தலைவர்கள், மாணவ மாணவிகள் ,பொது மக்கள் எனபலரும் கலந்து கொண்டனர்.
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் உயர்தரத்தில் கல்விகற்கும்மாணவர்களுக்கு மாதாந்தம் தலா ஆயிரத்தி ஐநூறு ரூபாய் வீதம்இரண்டு வருடத்திற்கு சிப்தொற கல்விப் புலமைப்பரிசில் வழங்கி வருகின்றது. அதற்கமைவாக சாய்ந்தமருது பிரதேசசெயலகத்திற்குட்பட்ட பாடசாலைகளில் உயர்தரத்தில் கல்விகற்கும் 16மாணவர்களுக்கு சிப்தொற கல்விப் புலமைப்பரிசில் காசோலைவழங்கப்பட்டதுடன் புகைத்தல் ஒழிப்பு தினத்தில் கூடுதல் நிதிகளைசேகரித்த சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் மற்றும் சமுர்த்திஅபிவிருத்தி உத்தியோகத்தர்களை இதன்போது அதிதிகள் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தனர்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
கல்வி அபிவிருத்தி ஊடாக குடும்பங்களை வலுவூட்டுதல் சிப்தொறபுலமைப் பரிசில் திட்டத்தின் செயற்பாடாகும். சிறந்த கல்வி அடைவின்மூலம் கூடுதல் வருமானங்களை பெறக்கூடிய தொழில் வாய்ப்புக்கள்இன்று காணப்படுகின்றது. இதன் மூலம் பல்வேறு குடும்பங்கள் வறுமைநிலையிலிருந்து மாறிவருகின்றது.

சமுர்;த்தி திட்டம் தங்கி வாழ்பவர்களை இல்லாமலாக்கிமுயற்சியாளர்களை உருவாக்குகின்றது. சமுர்த்தி வலுவூட்டல்திட்டத்தினூடாக தொழில் முயற்சியாளர்களை உருவாக்கிஅவர்களினூடாக ஏனைவர்களுக்கு தொழில்களை வழங்கக்கூடியவர்களாக அவர்களை மாற்றுதல் வேண்டும். இதற்காக பல்வேறு திட்டங்களை சமுர்;த்தி அபிவிருத்தி திணைக்களம் இன்றுவரைநடைமுறைப்படுத்தி வருகின்றது.

நாட்டின் அபிவிருத்திற்கு பயன்படுத்தப்படும் நிதிகளில்நிவாரணத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றது. சமுர்த்திநிவாரணத்திற்காக திறைசேரி வருடாந்தம் 45 வில்லியன் ரூபாநிதியினை ஒதுக்கீடு செய்கின்றது. கட்டுநாயக்க அதிவேகநெடுஞ்சாலையினை நிர்மாணிப்பதற்கு 1200 வில்லியன் ரூபாமதிப்பிடப்பட்டிருந்தது. எனவே நாட்டின் 3 வருடத்திற்கான சமுர்த்;திநிவாரண நிதியினை சேகரிப்பதனால் நாட்டின் அபிவிருத்திற்கான ஒருஅதிவேக நெடுஞ்சாலை ஒன்றினை நிர்மாணிக்க முடியும் எனவும் அவர்தெரிவித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -