உயர்தர பரீட்சையில் சித்தியடைந்துள்ள மாணவர்களை பாராட்டுகின்றேன்.


அகமட் எஸ். முகைடீன்-
கில இலங்கை மட்டத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் உயிர் முறைமைகள் தொழில்நுட்ப பிரிவில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ள சம்மாந்துறை முஸ்லீம் மத்திய கல்லூரி மாணவன் முகைதீன்பாவா றிசாட் முகம்மதையும், உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மூன்றாமிடத்தைப் பெற்று மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாத்தளை ஸாஹிரா கல்லூரி மாணவன் எம்.ஆர்.எம். ஹக்கீம் கரீமையும் பாராட்டுவதோடு உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்வேறு துறைகளுக்கும் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதிபெற்றுள்ள மாணவர்கள் அனைவரையும் வாழ்த்தி அவர்களின் எதிர்காலம் வளமானதாக அமைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்துள்ள மாணவர்களை பாராட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வாழ்த்துச் செய்தியினை வெளியிட்டுள்ளார்.
அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இம்முறை வெளியாகியுள்ள உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைவாக அதிகமான மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்வேறு துறைகளுக்கும் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதிபெற்றுள்ளனர். இம்மாணவர்களின் அயராத முயற்சிக்கான பிரதிபலன் இறைவனின் அருளால் கிடைத்துள்ளது.

சித்தியடைந்துள்ள இம்மாணவர்கள் தமது உயர் கல்வியினை மிகுந்த அக்கறையுடனும் ஆர்வத்துடனும் கற்றுச் சிறப்பதற்கும் ஏனைய மாணவர்கள் தன்னம்பிக்கையோடு செயற்பட்டு எதிர்காலத்தில் சிறந்த அடைவுகளைப் பெறுவதற்கும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
இம்மாணவர்களின் வெற்றிக்கு பக்கபலமாகச் செயற்பட்ட வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -