தனது பாலர் பாடசாலை ஆசிரியைகளை நினைவு சின்னம் வழங்கி கெளரவித்தார் கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பொறியியலாளர் இஹ்ஸான் ஜவாஸன்
தோப்பூர் தாருல் ஹிக்மா பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் பிரியாவிடை வைபவமும் கடந்த ஞாயிறுக்கிழமை 9 ஆம் திகதி பாலர் பாடசாலை கட்டிடத்தில் இடம்பெற்றது.
இப்பாலர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட 1995 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கடமையாற்றுகின்ற ஆசிரியைகளான முஸாஹிடீன் நபீலா, லாமுடீன் மிலாரியா ஆகியோரை 1995,1996 ஆகிய ஆண்டுகளில் இப்பாலர் பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவரான கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கடமையாற்றுகின்ற பொறியியலாளர் இஹ்ஸான் ஜவாஸன் நினைவு சின்னம் வழங்கி கெளரவித்தார்.