காரைதீவு பிரதேச சபையின் கடந்த ஜனவரி, பெப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களுக்கான மாதாந்த கணக்கறிக்கைகளை 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் சட்டத்தின் கீழ் காரைதீவு பிரதேச சபையின் காரைதீவு மகா சபை சுயேச்சை குழு உறுப்பினர் ஆறுமுகம் பூபாலரட்ணம் கோரி உள்ளார்.
இவர் இதற்கான எழுத்துமூல கோரிக்கையை காரைதீவு பிரதேச சபையின் செயலாளர் அ. சுந்தரகுமாரிடம் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக சமர்ப்பித்தார்.
இவர் இது குறித்து இன்று (29) சனிக்கிழமை காலை ஊடகவியலாளர்களை இவரின் காரைதீவு இல்லத்தில் சந்தித்து தெரிவித்தவை வருமாறு,
பிரதேச சபை தேர்தல் கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்று சபை நடவடிக்கைகள் மார்ச் மாதம் ஆரம்பமாகின. அதன் பின் ஏப்ரல் மாதத்தில் இருந்து சபையின் மாதாந்த அமர்வுகளுக்கு முன்னதாக மாதாந்த கணக்கறிக்கைகள் உறுப்பினர்களுக்கு கிடைத்து வந்துள்ளன.
ஆனால் வருடத்தின் முதல் மூன்று மாதங்களுக்கான மாதாந்த கணக்கறிக்கைகள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை. அம்மூன்று மாதங்களும் செயலாளரின் ஆளுகைக்கு கீழ்தான் சபை இயங்கி உள்ளது. அக்காலத்துக்கு உரிய மாதாந்த கணக்கறிக்கைகள் எம்மிடம் இல்லாததால் அவரசமாக நிறைவேற்றப்பட்ட காரைதீவு பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டின் வரவு - செலவு திட்டத்தை பரந்துபட்ட அளவில் சரி பார்க்க முடியாமல் போய் விட்டது.
நான் அவரிடம் அந்த மூன்று மாதங்களுக்குமான மாதாந்த அறிக்கைகளை சில நாட்களுக்கு முன் வாய் மூலம் கோரிய போதிலும் அவர் தராமல் தட்டி கழித்து விட்டார்.
இந்நிலையிலேயே தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எனது விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளேன். வரவு - செலவு திட்டத்தில் ஏராளமான குழப்பங்களும், குழறுபடிகளும் உள்ள காரணத்தால் அவற்றை விரிவாக ஆராய்ந்து தெளிவதற்கு அந்த அறிக்கைகள் தேவைப்படுவதால் ஒரு வார அவகாசத்தில் தந்து உதவுமாறு கோரி உள்ளேன்.