ரிஸ்வி ஜவஹர்சா முயற்சியினால் 2 கோடி 75 இலட்சம் செலவில் பொல்கஹவெல, ஒரலியத்த பாதைக்கு காபட் இடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது

எழுச்சி பெறும் பொல்கஹவெல
கெளரவ முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் உயர் நீதிமன்ற சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா அவர்களின் முயற்சியில் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சின் மூலம் பொல்கஹவெல, ஒரலியத்த பாதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் கெளரவ அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் ரூபா 2 கோடி 75 இலட்சம் நிதியொதுக்கீட்டில் கார்பட் இடும் பணிகள் (28) ஆரம்பிக்கப்பட்டது.
இப்பணியினை சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்சா ஆரம்பித்து வைத்ததுடன், பொல்கஹவெல ஜும்மா பள்ளியின் பேஷ் இமாம் அஷ்ஷேக் இன்ஸாத்( தீனி), குருணாகல் மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர்கள் உட்பட ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தகவல் :
திக்ருல்லாஹ் ஜிப்ரி,
குருநாகல் பிரதேச சபை உறுப்பினர்







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -