ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம்

ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் 39வது வருடாந்த பொதுக் கூட்டம் 04.11.2018 அன்று கொழும்பு மகாவெலி மையத்தில் இயக்கத்தின் தேசிய அங்கத்தவர்கள் 180 பேரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. இந் நிகழ்வில் இயக்கத்தின் புதிய தேசிய தலைவராக எச்.ஏ. உமைர் நஸீப் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டார்.

இயக்கத்தின் புதிய மத்திய சபை உறுப்பினர்களாக எம்.ஐ. அஹமட் நஸீப், எம்.எப். அஹமட் ஸுஹ்ரி, எம்.எஸ். அக்மல், எம். அல்தாப் (நளீமி), எம்.ஏ. அம்ஜத் கான், எம்.என். அய்யாஸ் மரிக்கார், ஏ.கே.கே. அஸ்மான் கான், எம்.இஸட்.எம். அஸ்ரம், எம்.என். பைஸுல் இஹ்ஸான், எம். புர்கான், என். ஹாஸிர், எம்.எம்.எம். இன்பாஸ், எம். முஸர்ரப் ஹஸீம் (நளீமி), எம்.எல்.எம். முஸ்தாக், எம்.என்.எம். ரிப்தி (நளீமி), எம்.எஸ்.எம். சஜாத், எம்.ஜே.எம். சாமில், எம்.என். வாஜித் ஆகியோர் வாக்கெடுப்பின் மூலமும் எம்.இஸட்.எம். ஆகிப், எம். அஸ்ரஸ், எம். இம்தாத், எம். இர்பான், என். முஆஸ், எம். ஹனீக், எஸ்.எம்.எம். சஜீர் (இஸ்லாஹி), எம்.எப். ஷாகிர் ஆகியோர் நியமனம் மூலமும் தெரிவு செய்யப்பட்டனர்;. இயக்கத்தின் புதிய பொதுச் செயலாளராக எம்.என். வாஜித் நிர்வாக சபை உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தேசிய தலைவர் அஷ்ஷெய்க். உஸைர் (இஸ்லாஹி) அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்புப் பேச்சாளராக அஷ்ஷெய்க். உவைஸ் (இஸ்லாஹி) கலந்துகொண்டார்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -