இலக்கிய வாசிப்பை மேம்படுத்தவும் இலக்கியப் படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள், இலக்கிய ரசனையாளர்களை ஒன்றிணைப்பதற்குமான நோக்கத்தில் இலக்கியப் பகிர்விற்கான ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்றை கொழும்பில் நடத்த சமூக ஊடக நண்பர்கள் வட்டம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
ஒரு முழுநாள் நிகழ்வாக நடைபெறவுள்ள இந்த ஒன்று கூடலில் தம்மைக் கவர்ந்த இலக்கியப் படைப்புகள் குறித்து காலை அமர்வின்போது பத்துப் பேரும் பிற்பகல் அமர்வின்போது பத்துப் பேரும் படைப்புகள் குறித்த ரசனைக் குறிப்புகளை வழங்க முடியும். இதற்கெனத் தகுதி தராதரங்கள் எதுவும் கிடையாது.
ரசனைக் குறிப்பை வழங்குவதற்கென ஒருவருக்கு 12 நிமிடங்கள் வழங்கப்படும்.
ரசனைக் குறிப்பை வழங்குமொருவர் தனது சொந்தப் படைப்புக்கள் பற்றிப் பேச முடியாது. மற்றொரு நபரின் இலக்கியப் படைப்பு ஒன்றைப் பற்றியே பேச முடியும். (கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், சிறுவர் இலக்கியம், குறுந்திரைப்படம்)
ரசனைக் குறிப்பை வழங்க விரும்புவோர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்குத் தாம் தேர்ந்தெடுத்துள்ள இலக்கியப் படைப்புப் பற்றிய பத்து வரிகளுக்கு மேற்படாத குறிப்பையும், பெயர், தபால் முகவரி, தொடர்பு இலக்கம் ஆகியவற்றையும் அனுப்பி வைக்க வேண்டும்.
முதலில் வரும் விண்ணப்பங்களின் அடிப்படையில் பகிர்வோர் வரிசைப்படுத்தப்படுவதுடன் வௌ்வேறு படைப்புகள் பற்றிய குறிப்புகள் நிகழ்வில் இடம்பெற வேண்டும் என்ற அடிப்படையிலும் தேர்வு இடம்பெறும். தெரிவானவர்களுக்கு மின்னஞ்சல், தொலைபேசி மூலமும் மற்றும் பத்திரிகை, இணையத் தளங்கள் மூலமும் அறிவிக்கப்படும்.
கலந்து கொண்டு பகிரந்து கொள்ள விரும்புவோர் எதிர்வரும் 30.11.2018 அன்றுக்கு முன்னர் தமது விபரங்களை ashroffshihabdeen@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
பார்வையாளர்களாக யாரும் கலந்து கொள்ள முடியும்.
நிகழ்வுகள் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 6.00 மணிக்கு முடிவடையும்.
