இறைதூதர் முஹம்மது நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதான மீலாத் நிகழ்வு ஏறாவூரில் 20.11.2018 நடைபெற்றது.
ஏறாவூர் அஹலுஸ் ஸுன்னா மீலாத் குழு இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
ஆறு அறபுக்கல்லூரிகள் மற்றும் ஆறு குர்ஆன் மதரசாக்களையும் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மார்க்கப் பெரியார்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஆற்றங்கரையோர ஒலியுல்லாஹ் அடக்க ஸ்தல முன்றலில் நடைபெற்ற கொடியேற்றம் மற்றும் விசேட பிரார்த்தனையினையடுத்து வாகன பவனி ஆரம்பமானது.
தைக்காவடி, சத்தாம் ஹுஸைன் உள்ளிட்ட கிராமங்கள் ஊடாக புன்னக்குடா வீதியைக்கடந்து மணிக்கூட்டுக்கோபுரச் சந்தியில் முடிவடைந்தது.
பின்னர் அங்கிருந்து ஆரம்பமான நடைபவனி பிரதான வீதியிலுள்ள முகைதீன் ஜும்ஆப்பள்ளி வாயல் முன்றலில் நிறைவடைந்தது.
ஊர்வலத்தில் வந்தோரை ஏறாவூர் நகர சபை முதல்வர் ஐ. அப்துல் வாசித் நகர சபைக்கு முன்பாக நின்று கைலாகு செய்து ஊர்வலத்தில் இணைந்துகொண்டார்.