இலங்கை போன்ற ஒரு நாட்டில் வாழும் முஸ்லிம்கள் தமக்கான இருப்பின் அடையாளங்களான இடங்களையும், கலாசார நிகழ்வுகளையும் கட்டிக்க காக்க வேண்டிய கடமைப்பாடுடையவர்கள் அந்த வகையில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினமான மீலாத்விழாவினையும் சிறந்த முறையில் கட்டமைத்துக் கொண்டாட வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.
மீலாத் யாருக்கு ..
நபியவர்கள் அகிலத்துக்கான அருட்கொடை, அதாவது இவ்வுலகில் பிறந்த,பிறக்க இருக்கின்ற அனைத்து மத, இன மக்களுக்கும். சொந்தக்காரர் அந்த வகையில் அவர்களது பிறப்பினைச் சிறப்பிக்க எல்லோருக்கும் உரிமை உண்டு, அதிலும், ஏழைகளும், சிறார்களும் இன்றைய தினத்தால் அதிக சந்தோசம் அடைகின்றனர்.
சர்வதேசத்தில் மீலாத் ..
மீலாத் உலக முஸ்லிம் வரலாற்றில் மிக நீண்ட வரலாற்றைக்கொண்டது மட்டுமல்ல சர்வதேச ரீதியாக இஸ்லாமியக் கிலாபத் இடம்பெற்ற காலப்பகுதிகளில் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற நிகழ்வுகளாகும், இன்றும் சர்வதேச அளவில் உலகில் பல நாடுகளில், இடங்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது, பிற்கால அரசியல், குடும்ப ஆட்சி நோக்கில் இது தொடர்பான பிழையான கருத்துக்கள் திட்டமிட்டுப் பரப்பப் பட்டன.
இலங்கையில் மீலாத் ..
இலங்கையில் மீலாத் நிகழ்வு அரச மட்டத்தில் நினைவு கூரப்படவேண்டும் என்பது அரசாங்க சுற்று நிருபம் இன்னும் அதன் பெயரில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களும் இடம் பெற்று வருவதுடன் அந்த நாள் "அரச பொது விடுமுறை யாகவும் வழங்கப் பட்டிருப்பதும் இலங்கை முஸ்லிம்களுக்கான ஒரு வரப்பிரசாதமாகும் மட்டுமல்ல அந்த நாளில் பிற சகோதர மத்த்தவர்கள் இஸ்லாத்தையும் நபிகளையும் பற்றி விளங்கிக்கொள்வதற்கான நல்லதோர் வாய்ப்பும் கிடைக்கின்றது.
எதிர்க்குரல்களும், கலாசாரத் தற்கொலையும் ...
மீலாத்தை சமய ரீதியாக மட்டுமே நோக்குவோர் அதனை ஒரு சமூக நிகழ்வாக ஏற்க மறுக்கின்றனர், இந்நிலை மாற வேண்டும்.
ஒரு சமூகத்தின் இருப்பினை அழிப்பதாயின் அதன் கலாசார அம்சங்களை இல்லாமல் ஆக்குவதுதான் அதற்கான முதற்படி மட்டுமல்ல எமது கலாசாரத்தை எம்மைக் கொண்டே அழித்தல் கலாசாரத்தற்கொலை (Cultural Suicide) என்றும் கூறலாம், இந்த வகையில் விதண்டாவாத எதிர்க்குரல்கள் இனியாவது அடக்கி வாசிக்கப்பட வேண்டும், அல்லது ஏழை வியாபார மற்றும் சிறார்களுக்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும், மாறாக வறட்டு சமயவழி நோக்கில் மாத்திரம் விமர்சிப்பது பொருத்தமற்றது.
இறுதியாக ..
சர்வதேச அளவில் ஆய்வாளர்களாலும், எழுத்தாளர்களாலும் "முஹம்மதிய" சமூகம் முஹம்மதிய மார்க்கம் என அறியப்பட்ட முஸ்லிம்களும் இஸ்லாமும் அதன் நிகழ்வுகளும் நீண்ட வரலாற்றைக் கொண்டது.
ஆனால் இன்று ஒரு சில சர்வதேச அரசியல் காரணங்களுக்காக அதன் அடிப்படையிலேயே கேள்வி தொடுப்பது இச்சமூகத்தினர் அரசியல் ரீதியாக மட்டுமல்ல அடையாள ரீதியாகவும் புறக்கணிக்கப்படுவதற்கான பிழையான வழிகாட்டல்கள் என்றே கூறலாம்.
எனவேதான் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி நபிகளாரின் புகழ் பாடி இந்த மீலாத் தினத்தைக் கொண்டாடுவோம்.
அனைவருக்கும் இனிய மீலாத் வாழ்த்துக்கள்.
யாநபி ஸலாம் அலைக்கும், யாறசூல் ஸலாம் அலைக்கும்..