திருகோணமலை ஈச்சிலம்பற்று பகுதியில் வீடொன்றினுள் அனுமதியின்றி நுழைந்து கொலை அச்சுருத்தல் விடுத்த இருவரை இன்று(27) கைது செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ள இச்சபவத்தில் இலங்கத்துறை,ஈச்சிலம்பற்று பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரையும்,கல்லடி,மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரையுமே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:
ஈச்சிலம் பற்று பகுதியில் குறித்த சந்தேக நபர்களோடு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக குடும்ப சண்டை காரணமாக பகை ஏற்பட்டுள்ளது.
அந்த பழையை பகைமையை குரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு சந்தேக நபர்கள் இருவரும் அனுமதியின்றி வீட்டுக்குள் புகுந்து கொலை செய்வதாக கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக சந்தேக நபர்களுக்கெதிராக பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.