மூதூரில் அண்மையில் அடைமழையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 12 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 100 பயனாளிகளுக்கு வெள்ள நிவாரண உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (22) காலை தோப்பூர் உப பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
மூதூர் பிரதேச செயலத்தின் ஏற்பாட்டிலும், குளோபல் இஹ்ஸான் றிலீப் அமைப்பின் அனுசரணையிலும் இவ் நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.முபாரக், குளோபல் இஹ்ஸான் றிலீப் அமைப்பின் உத்தியோகத்தர்கள் ,கிராம உத்தியோகத்தர்கள் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,சமூர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.