சிவாநந்தா பழையமாணவர் சங்கத்தின் வைரவிழா!



காரைதீவு சகா-
லகின் முதல் தமிழ்ப்பேராசிரியர்முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த
அடிகளார் உருவாக்கிய மட்டக்களப்பு கல்லடி சிவாநந்தா தேசிய வித்தியாலய பழையமாணவர் சங்கத்தின் வைரவிழா எதிர்வரும் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கிறது.
பழையமாணவர்சங்கத்தின் தலைவர் முருகேசு முருகவேள் தலைமையில்
நடைபெறவிருக்கும் 60வது வருடாந்த பொதுக்கூட்டம் மற்றும் வைரவிழா
நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன.
இராமகிருஸ்ணமிசன் மட்டு.மாநில முதல்வர் ஸ்ரீமத் சுவாமி தக்ஸயானந்தா
ஜீயின் ஆசியுடன் அன்றைய நிகழ்வுகள் யாவும் நடைபெறவுள்ளன.
காலை 8மணிக்கு கல்லடி இ.கி.மிசன் ஆச்சிரமத்தில் விசேட பூஜை நிகழ்வுகள்
இடம்பெறும். தொடர்ந்து சிவாநந்தா வித்தியாலய சுவாமி நடராஜாநந்தா
மண்டபத்தில் வைரவிழா நிகழ்வுகள் நடைபெறும்.
அங்கு வைரவிழா சிறப்பு நிகழ்வுகள் நடைபெறக் காத்திருக்கின்றன.

சிவாநந்தா வித்தியாலயம் 90வது வருடத்தை அடைகின்ற அதேவேளை அதன்
பழையமாணவர்சங்கம் 60வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளது என்பது
முக்கியமானதொன்று. எனவே இந்த வைரவிழாவிழாவிலும் பொதுக்கூட்டத்திலும் அனைத்து பழையமாணவர்களையும் அன்புடனும் வாஞ்சையுடனும் அழைப்பதாக பழையமாணவர் சங்கச்செயலாளார் எஸ்.பவானந்தராஜா தெரிவித்தார். அங்கத்துவம் பெற்ற மற்றும் பெறாத சகல பழைய மாணவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
பழையமாணவர் சங்கத்தின் வைரவிழாவையொட்டிய சிநேகபூர்வ விளையாட்டுப் போட்டிகள் நாளை (24) சனிக்கிழமை கல்லடி சிவானந்தா மைதானத்தில் நடைபெறவிருக்கின்றன..
பொதுக் கூட்டத்தை சிறப்பிக்கும் வகையில் அமைந்த பாடசாலை மாணவர்களுக்கும் பழைய மாணவர்களுக்குமான சினேகபூர்வ முன்னோடி விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் நாளை சனிக்கிழமை நடைபெறுகிறது.
காலை மு.ப 08.30 மணியளவில் கிரிக்கட் போட்டியும் பி.ப 04.30 மணியளவில் உதைபந்தாட்டப் போட்டியும் நடைபெறவிருக்கிறது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -