கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் புதிய அதிபராக எம்.ஐ. ஜாபீர்



எஸ்.அஷ்ரப்கான், றியாத் ஏ. மஜீத்-

ல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை கல்வி நிர்வாக சேவையிலுள்ள எம்.ஐ. ஜாபீர் இன்று (02) மாலை பாடசாலைையில் பதவியேற்றார்.


இந்நிகழ்வில் பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், முன்னாள் அதிபர் எம்.எஸ். முஹம்மட் , ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களான எஸ்.அஷ்ரப்கான், றியாத் ஏ. மஜீட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


கல்முனை ஸாஹிரா கல்லூரி அதிபராக கடமையாற்றிய எம்.எஸ். முஹம்மட் ஓய்வு பெற்றுச் செல்வதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பொருத்தமான அதிபரை விரைவாக நியமனம் செய்யும் வகையில் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் கல்வி அமைச்சின் உதவியுடன் முன்னாள் பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் எடுத்த தீவிர நடவடிக்கையினால் அக்கல்லூரியின் அதிபராக எம்.ஐ. ஜாபீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


சாய்ந்தமருது பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றுக்கு அதிபராக கடமையேற்றமையின் மூலம் பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் உறுதுணையாக இருக்கும் என முன்னாள் பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -