பொதுபலசேனா ரணில் தலைமையில் இயங்கும் ஒரு இயக்கம் என்று மிகத் தைரியமாக மின்னல் நிகழ்ச்சியில் கூறியவர். அந்த வீடியோ இன்றும் வைரலாக பரவிவருவதை நாம் அறிவோம். அவர் கூறிய விடயம் இன்று நிரூபணமாகி வருகின்றது எனலாம்.
அதே நேரம் 2002ம் ஆண்டு மிகத் தைரியமாக நின்று கல்முனை பசாரை காப்பாற்றியவர். அதுமட்டுமல்ல இன உணர்வு என்று வரும்போது நெஞ்சை நிமிர்த்தி முன்னுக்கு செல்லக்கூடிய தைரியசாலி.
இப்படிப்பட்டரின் திறமைகளும், உணர்ச்சிகளும் ஏதோ காரணத்தால் மழுங்கடிக்கப்பட்டு வருகின்றது என்பதே எங்களின் கருத்தாகும். சூழ்நிலைக் கைதியாக மாட்டிக் கொண்டதனால்தான் அவர் விமர்சிக்கப்படுகின்றார் என்பதே உண்மை...
ஆகவே அரசியல் ரீதியாக அவர் என்ன முடிவை எடுத்தாலும் சரி. அது அவருடைய தனிப்பட்ட விடயமாகும். எது எப்படியோ அவர் மிக தைரியமான ஒரு மனிதர் என்பதில் என்னிடம் மாற்றுக்கருத்து இல்லை.
