கல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினர் றபீக் சத்தியப்பிரமாணம்..!

அஸ்லம் எஸ்.மௌலானா-
ல்முனை மாநகர சபையின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பான புதிய உறுப்பினர் ஏ.எல்.றபீக் இன்று செவ்வாய்க்கிழமை (20) பிற்பகல் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், மாநகர சபை உறுப்பினர் எம்.எம்.நவாஸ், சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அஹ்சன் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
கல்முனை மாநகர சபையின் சுதந்திரக் கட்சி உறுப்பினராக பதவி வகித்து வந்த இசட் ஏ.எச்.ரஹ்மான், மீண்டும் பொலிஸ் சேவையில் இணைந்து கொண்டதைத் தொடர்ந்து, உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார். அவ்வெற்றிடத்துக்கே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளரின் பரிந்துரையின் பேரில் றபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் நற்பிட்டிமுனை வட்டாரத்தில் போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -