கல்முனை மாநகரில் மாபெரும் மீலாத் ஊர்வலமும் நிகழ்வுகளும் (20) இன்று இடம்பெற்றது. கல்முனை கடற்கரைப்பள்ளிவாசலில் இருந்து விசேட துஆ பிரார்த்தனையுடன் ஆரம்பிக்கப்பட்ட இவ் மீலாத் ஊர்வலமானது
கல்முனை கடற்கரை வீதியினுடாக சென்று கல்முனையில் உள்ள பிரதான உள்ளக வீதியின் ஊடாக கல்முனை நகரினுடாக ஊடாக சென்று மீண்டும் கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் முடிவடைந்ததது. இவ் ஊர்வலத்தில் ஏராளமான குர் ஆன் மத்ரசா மாணவர்கள் ,பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இதே வேளை கல்முனை வர்த்தக சங்கத்தினரால் மீலாத் வைபவமும் இடம்பெற்றது இதில் மீலாத் நபி தொடர்பான விளக்கம் உபன்யாசங்கள் இடம்பெற்றது இதில் கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம் றக்கிப் மாநகர சபை உறுப்பினர்கள் வர்த்தர்கள் உலமாக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
மேலும் இவ் மீலாத் ஊர்வலத்தின் பொது மக்களுக்கும் குர் ஆன் மத்ரசா மாண்வர்களுக்கும் உணவுப் பண்டங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ் மீலாத் நிகழ்வுகள் கல்முனையிலுள்ள பொது அமைப்புகள் ,வர்த்தக சங்கத்தினர்,பொதுகழகங்களினால் இவ் நிகழ்வுகள் ஏற்ப்பாடு செய்யப்பட்திருந்தமை குறிப்பிட த்தக்கது.