காத்தான்குடி மட்/மம/அஷ்- ஷுஹதா வித்தியாலத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் எம்.சீ.எம்.முனீர் தலைமையில் வியாழக்கிழமை (29) காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
நடந்து முடிந்த தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு நினைவுச்சின்னமும் பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
அத்துடன் பாடசாலையில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையிலான கலை நிகழ்வுகளுடன் இடம்பெற்ற
இந் நிகழ்வில் காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.பதுர்தீன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் கல்வியாளர்கள் ,ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.