ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. தூதுவர் டெப்லிட்ஸின் கணவர் ரொபர்ட் சோலும் இதன்போது உடனிருந்தார். இந்த நாட்டுக்கும், பிராந்தியத்துக்கும் மிக முக்கியமான இந்த தருணத்தில் இலங்கைகான அமெரிக்கத் தூதுவராக பணியாற்றுவது தொடர்பில் நான் பெருமையடைகிறேன். இலங்கையின் சமாதானம் மற்றும் சுபீட்சத்துக்கான பயணத்தில் அமெரிக்கா ஏழு தசாப்தங்களாக இலங்கைக்கு ஒத்துழைப்பு நல்கி வருகிறது. சவால்களுக்கு தீர்வு காண்பதற்கும் பாதுகாப்பானதும் வெற்றிகரமானதுமான இந்து-பசுபிக் பிராந்தியமொன்றை உருப்படுத்துவதற்கு எம் முன்னால் இருக்கும் வாய்ப்புகளை இறுக பற்றிக் கொள்வதற்கும் நாம் ஒன்றுபட்டு பணியாற்றுகிறோம் என்ற வகையில் இந்த பயணத்தில் நானும் உங்களுடன் இணைந்து கொள்ள எதிர்பார்க்கிறேன்.
ஜனநாயகம் மக்களை வலுப்படுத்தும் மற்றும் மனித உரிமைகள் மதிக்கப்படுவது அனைவருக்கும் உறுதிப்படுத்தப்படும் எதிர்காலமொன்றை உறுதிப்படுத்த நாம் ஒன்றுபட்டு உதவ முடியும் என்று தூதுவர் டெப்லிட்ஸ் தெரிவித்தார். தூதுவர் டெப்லிஸ்ட் 2015-2018 காலப் பகுதியில் நேபாளத்துக்கான அமெரிக்கத் தூதுவராக கடமையாற்றியிருந்தார். 1991ஆம் ஆண்டு இராஜாங்கத் திணைக்களத்தில் இணைந்துகொண்ட இவர், 'மினிஸ்டர் கவுன்சிலர்' பதவிநிலையிலுள்ள சிரேஷ்ட வெளிவிவகார சேவை அதிகாரியாவார் கொள்கை, உரிமைகள் மற்றும் புத்தாக்கம் தொடர்பான திணைக்கள முகாமைத்துவ அலுவலகத்தின் பணிப்பாளராக 2012-2015ஆம் ஆண்டு காலப் பகுதியில் பணியாற்றினார்.
இங்கு பணியாற்றும்போது அமெரிக்காவின் இராஜதந்திர சேவையை எவ்வாறு புத்தாக்கத்துடன் முன்னேற்ற முடியும் என அவர் அடையளம் கண்டிருந்ததுடன் அறிவு மேலாண்மை முகாமைத்துவம் தரவுப் பயன்பாடு மற்றும் இடர் மேலாண்மை ஆகிய விடயங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருந்தார். இந்தப் பதவியில் பணியாற்றுவதற்கு முன்னர் தூதுவர் டெப்லிஸ்ட், காபூலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முகாமைத்துவத்துக்கான மினிஸ்டர் கவுன்சிலராக 2011-2012 காலப் பகுதியில் பணியாற்றியிருந்தார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள தூதுவருக்கு பொதுமக்களின் செயற்பாடுகள் தொடர்பில் மேற்பார்வை செய்யும் குழுவொன்றை இவர் இயக்கியிருந்ததுடன், இராணுவக் குறைப்பினால் ஏற்பட்ட தாக்கம் குறித்து திட்டமிடுதல் தொடர்பிலும் செயற்பட்டிருந்தார்.


