லிந்துலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ரட்ணகிரிய, சமர்சட், பாமஸ்டன் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் 26.11.2018 திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
1000 ரூபா சம்பள உயர்வை வழங்குமாறு வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டமானது ஊர்வலமாக கறுப்பு கொடிகளை ஏந்திய வண்ணமும் கோஷங்களை எழுப்பியவாறும் அட்டன் நுவரெலியா பிரதான வீதிக்கு வந்த தொழிலாளர்கள் பாமஸ்டன் சந்தியில் வீதியின் ஓரமாக நின்று இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாமஸ்டன் சந்தியை சேர்ந்த நகர வர்த்தகர்கள், கடைகளை அடைத்து தங்களது ஆதரவை தெரிவித்திருந்தனர். மேலும் அங்கிருந்த மதுபானசாலையும் மூடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.