தென்கிழக்கு பல்கலைக்கழக சுதந்திர ஊழியர் சங்கத்தின் இரண்டாவது வருடாந்த பொதுக் கூட்டம் நாளை மறுதினம் புதன்கிழமை (28) காலை 10.30 மணிக்கு பல்கலைக்கழக ஊழியர் மேம்பாட்டு மத்திய நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
சங்கத்தின் தலைவர் ஏ எம் அன்வர் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாகவும் பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் கௌரவ அதிதியாகவும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
இலிகிதர் சேவையும் அதனோடு இணைந்த சேவையாளர்களையும் கொண்ட இந்த ஊழியர் சங்கத்தின் உருவாக்கம், அதன் முக்கியத்துவம் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்த விரிவான கொள்கை விளக்க உரையும் இடம்பெறவுள்ளதாக அதன் தலைவர் ஏ.எம்.அன்வர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.