எதிர்வரும் வெள்ளிவரை (23)பாராளுமன்ற நடவடிக்கை ஒத்தி வைப்பு!
பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 23-11-2018 காலை 10 மணி வரை பிரதி சபாநாயகரால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் இன்று பகல் 1 மணிக்கு கூடியதன் பின்னர் மீண்டும் 23ஆம் திகதி காலை 10 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற அமர்வுகள் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் சற்று முன்னர் நான்காவது முறையாகவும் கூடியது.இந்நிலையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் இடையே பெரும் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனவே மீண்டும் ஒன்று கூடியபோது பாராளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் வெள்ளிக்கிழமைகாலை 10 மணி வரைஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.