சாய்ந்தமருதில் பிறந்த ஒருமகனை பொதுத்தேர்தலில் களமிறக்கி வெற்றிபெறச் செய்வதன் மூலம் நமது இலக்கை அடையமுடியும்.


-மாநகரசபை உறுப்பினர் எம்.ஏ.றபீக்- 
அஸ்ஹர் இப்றாஹிம்-
'சாய்ந்தமருதிற்கான நகரசபை விடயத்தில் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசித்திரிந்த அரசியல் வாதிகளை பிரதேசத்திலிருந்து அடியோடு ஓரம்கட்ட சரியான சந்தா்ப்பம் கிடைத்துள்ளது.'

வ்வாறு சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தற்போதய அரசியல் களநிலவரம் தொடர்பில் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றிய கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஓய்வுபெற்ற நில அளவையாளர் எம்.ஏ.றபீக் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,
சாய்ந்தமருது பிரதேச மக்கள் கடந்த ஒருவருடமாக சாய்ந்தமருதிற்கென தனியான நகரசபையொன்றை பிரகடனப்படுத்துமாறு அரசாங்கத்தையும் சம்பந்தப்பட்ட தரப்பினரையும் பிரதேச அரசியல் தலைமைகளையும் எத்தனையோ வழிகளில் மன்றாடி கேட்ட போதும் அதனை பெற்றுக் கொடுப்பதில் காய்நகர்த்தலில் ஈடுபட்டு அதனை கிடைக்க முடியாத அளவிற்கு செய்தனர்.
அவ்வாறு செய்த அரசியல்வாதிகளுக்கும் அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிக்கும் சாட்டயடி கொடுக்கும் வகையில் முழு சாய்ந்தமருதும் ஒற்றுமைப்பட்டு சுயேட்சைக் குழுவொன்றை கல்முனை மாநகரசபை தேர்தலிலும் , காரைதீவு பிரதேச சபை தேர்தலிலும் களம் இறக்கி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காட்டைச் சேர்ந்த ஒருவரையேனும் வெற்றியடைய செய்ய முடியாத வரலாற்று சான்றொன்றை ஏற்படுத்தியதனை எவராலும் மறக்க முடியாது.

கல்முனை மாநகரசபையில் 9 உறுப்பினர்களையும் காரைதீவு பிரதேச சபையில் ஒருவரையும் தெரிவு செய்வதில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு பொது மக்கள் காட்டிய ஆர்வமும் உட்சாகமும் காரணமாக அரசியல் கட்சிகள் தோல்வியினை தழுவி புறமுதுகு காட்டி ஓடினார்கள். உள்ளுராட்சி மன்ற தேர்தலினபின்னரும் கூட சாய்ந்தமருதிற்கென தனியான நகரசபை கிடைக்கக்கூடாது என்பதில் தொடர்ந்தும் கண்ணும் கருத்துமாக இருந்த அரசியல்வாதிகளுக்கு அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் வயிற்றை கலக்க ஆரம்பித்து வைத்தது.
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மேற்கொண்ட அதிரடி பாராளுமன்ற கலைப்பு சாய்ந்தமருது நகரசபை பிரகடனத்திற்கு உள்ளொன்று வைத்துக் கொண்டு புறத்தால் அதனை தடுப்பதில் முன்னின்ற அரசியல் வாதிகளை எதிர்வரும் பொதுத்தேர்தலில் பாராளுமன்ற படிகளை மிதிக்காதவாறு பிரதேசத்திலிருந்தும் அரசியலிலுமிருந்தும் ஓரம் கட்ட சாய்ந்தமருது பிரதேச மக்களுக்கு இறைவன் இரண்டாவது சர்ந்தர்ப்பத்தை வழங்கியுள்ளான்.
இப்போது கிடைத்திருக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தை மிகவும் நுட்பமாகவும் புத்திசாதூரியமாகவும் சாய்ந்தமருது – மாளிகைக்காடு மக்கள் பயன்படுத்தி சாய்ந்தமருதில் பிறந்த ஒரு மகனை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதன் மூலம் நகரசபையை நோக்கிய பயணத்தை வெற்றி கொள்ள முடியும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -