நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) ஏற்பாட்டில் "அதாலா" நிறுவனத்தின் அனுசரணையில் இலங்கை தேசிய கண் வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் இலவச கண் வைத்திய முகாமும் சத்திர சிகிச்சையும் 20 ம் திகதி சனிக்கிழமை காத்தான்குடி ஜுமைறா பெலஸ் இல் இடம்பெற்றது.
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ILM.றிபாஸ் தலைமையில் விஷேட கண் வைத்திய நிபுணர்கள் கலந்துகொண்ட இவ் இலவச வைத்திய முகாமில் அதிகமான பொதுமக்கள் கலந்துகொண்டதுடன் .
இவ் வைத்திய முகாமில் சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட வேண்டிய நோயாளர்களுக்கான சத்திர சிகிச்சை கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் இலவசமாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ILM.றிபாஸ் தெரிவித்தார்..
இவ் வைத்திய முகாமில் காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களிலுள்ள அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.













