இலங்கைத்தமிழரசுக்கட்சித் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான
மாவை சேனாதிராஜாவுடன் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில்
சந்திப்பை மேற்கொண்டு சமகால களநிலைவரம் தொடர்பாகக் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பு இன்று(15) திங்கட்கிழமை மட்டக்களப்பில் சுமுகமாக
நடைபெற்றது. அவ்வமயம் த.தே.கூட்டமைப்பின் காரைதீவு பிரதேசசபை உறுப்பினர்
த.மோகனதாசும் சமுகமளித்திருந்தார்.
காரைதீவு பிரதேசசபையின் கடந்த 8மாதகால நகர்வுகள் மற்றும் நடைபெற்றுவரும்
வரும் அபிவிருத்திச்செயற்பாடுகள் அதற்கு தடையாகவுள்ள அதிகாரிகள் தொடர்பாக
எடுத்துரைத்தார்.
சபைக்குத் தேவையான வாகனம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் பேசப்பட்டது.
காரைதீவு மயான பாதுகாப்பு விவகாரம் கடலோரப்பாதுகாப்பு தரப்பினரின்
முட்டுக்கட்டை தொடர்பாகவும் பேசப்பட்டன. ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.
கொழும்பு சென்றதும் உரிய அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன்
இதுவிடயங்கள் தொடர்பாகப் பேசுவதான மாவைசேனாதிராஜா உறுதியளித்தார்.
