முன்னாள் அமைச்சா் பேரியல் அஷ்ரப் சவுதி அரேபியாவின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் சுனாமியால் பாதிக்க்பட்ட 500 குடும்பங்களுக்காக
அக்கரைப்பற்று நுரைச்சோலையில் 50 ஏக்கா் அரச காணியில் நிர்மாணித்த500 வீடுகள், வைத்தியசாலை, சந்தை, சனசமுக நிலையம் பள்ளிவசால்கள் இன்னும் பகிர்ந்தளிக்கப்படாமல் 12 வருடங்களாகியுள்ளது. அதனை 12 வருடங்களுக்குப் பிறகுதான் எமது அம்பாறையின் சிரேஸ்ட ஊடகவியலாளா் வசந்தபால நேற்றைய 14ஆம் திகதிய ஞயிறு லங்காதீப சிங்கள வாராந்த பத்திரிகையில் சிங்கள சமுகத்திற்கு இச் சம்பவத்தைக் தொட்டுக் காட்டியுள்ளாா்.(இப் பத்திரிகை 70 வீத மான சிங்கள மக்கள் வாசிக்கும் பத்திரிகையாகும்) 12 வருடத்திற்கு முன் வசந்தபால இவ் வீடமைப்புத் திட்டம் சம்பந்தமாக பல்வேறு முரன்பட்ட தும் தீகவாபி காணி அபகரிப்பு பற்றிய ஆக்கங்களையே சிங்கள ஆங்கில பத்திரிகைகளில் எழுதி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.). இப்பொழுது தான் அவா் உண்னமையை உணா்ந்துள்ளாா். அம்பாறை மாவட்டத்தில் சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவுதி அரசின் 500 கோடிருபா செலவில் இவ் வீடமைப்புத் திட்டத்தினை முன்னாள் அமைச்சா் பேரியல் அஷ்ரப் கொண்டுவந்ததாகவும் இவ் வீடமைப்புத் திட்டம் 12 வருடமாக அழிந்து நாசமாகிப்போகின்றது. என உண்மையை எழுதியிருக்கின்றாா். ஊடகவியலாளா் வசந்தபாலவுக்கு எனது மனமாா்ந்த நன்றி சவுதி அரேபிய சேக் மாா்களது ஒவ்வொரு சவுதி றியால்களை கொண்ட இந் நன்கொடை(ஸககாத் நிதியத்தில் )நிர்மாணிக்கப்பட்ட இவ் வீடமைப்புத் திட்டம் யாருக்காவாது பிரயோசனபட நாம் பிராத்திப்போமாக .இதனைக் கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வக்கில்லாத தமது அரசியல் தலைமைகள் பிரநிதிகள்தான் நம் மத்தியில் உள்ளனா்.

