எச்.எம்.எம்.பர்ஸான்-
கொழும்பு டி.எஸ்.சேனநாயக கல்லூரியில் தரம் நான்கில் கல்வி கற்கும் ஓட்டமாவடியைச் சேர்ந்த மாணவன் தில்தர் பதீன் தமிழ்த் தினப் போட்டியில் பங்குபற்றி முதலிடம் பெற்றுள்ளார்.
குறித்த மாணவன் பாடசாலை ரீதியில் இடம்பெற்ற தமிழ்த் தினப் போட்டி பாவோதல் நிகழ்ச்சியில் தன்னுடைய திறமையினை வெளிப்படுத்தி முதலிடம் பெற்று பிரதேசத்திற்கும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவர் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன நேத்ரா அலைவரிசையின் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் அறிவிப்பாளருமான ஊடகவியலாளர் முபாரக் முகைதீன் மற்றும் எச்.எம்.எப்.பர்மினா ஆகியோர்களின் புதல்வருமாவார்.

