நமக்குள்ளும் ஒரு சுமந்திரன் - சட்டமுதுமாணி வை எல் எஸ் ஹமீத்

 இந்த நாட்டிலே ஒரு அரசியல் பூகம்பம் வெடித்து இன்று வழிந்தோடிக் கொண்டிருக்கிறது.அது குறித்து அரசியல் மற்றும் சமூக அரகிலே பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் சூடாக்கவும் விறுவிறுப்பாகவும் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆனால் இங்கு அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பது ஜனாதிபதியின் செயல் சட்டபூர்வமானதா..? என்பதேயாகும்.

அதுகுறித்து இங்கு சட்டம் தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் என பலரும் பலவிதமான சட்ட வியாக்கியானங்களை முன்வைத்து வருகின்றனர்.

ஆனால் முழுமையான சட்டப் பின்னணியில் அதாவது அரசியல் அமைப்புச் சட்டத்தை எவ்வாறு பொருள்கோட வேண்டுமோ அதே முறைமையில் சம்பவத்தைச் சட்டத்தின் கண்களால் நோக்கி விளக்கமளிக்கும் சகோதரர் சட்டமுதுமானி வை எல் எஸ் ஹமீத் அவர்களது காணொளி ஒன்றும் கட்டுரை ஒன்றும் சமூகவலைத்தளங்களில் காணக் கிடைத்தது.

இதுவரை மேற்படி சம்பவம் குறித்து வெளிவந்துள்ள காணொளிகளில் அரசியலமைப்புச் சட்ட நிபுணர் என்றவகையில் கருத்துத் தெரிவித்து வெளிவந்திருக்கும் ஒரே காணொளி நானறிந்தவரை இது ஒன்றே.ஆங்கிலத்திலும் தமிழிலும் என சட்ட வியாக்கியானத்தை பிரித்து மேய்ந்திருந்தார்.

இதற்க்கு முதலும் இவரது முகநூலில் இவர் எழுதி வந்த முஸ்லீம் சமூகத்தின் உரிமை சார்ந்த கட்டுரைகளையும் அடிப்படை அரசியல் கருத்துக்கள் சார்ந்த கட்டுரைகளினையும் விடாமல் வாசித்து வந்திருக்கின்றேன் என்ற அடிப்படையில் வை எல் எஸ் ஹமீத் என்ற மிகப் பெரும் அறிவாளுமையின் பயனை நாம் சுகிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் எனக்குள்ளே பல முறை எழுந்திருக்கின்றது.

அரசியலமைப்புச் சட்டத்தில் தனது முதுமானிப் பட்டத்தினைப் ஒற்றிடுக்கும் இவர் தற்போது தனது கலாநிதிப் படத்துக்கான முயற்சிகளையும் அதே அரசியலமைப்புச் சட்டத்த்தில் மேற்கொள்ள இருக்கிறார் என்பது நமது சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் வரம் என்றே கூற வேண்டும்.ஏனெனில் அரசியலமைப்புச் சட்டத்தில் நானறிந்தவரை புலனை பெற்றிருக்கும் ஓரிரு முஸ்லிம்களில் இவரும் ஒருவர். குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில் இவர் ஒருவரே.

சட்டத்த்தொழிலில் கொடிகட்டிப் பிறக்க வேண்டுமானால் குற்றவியல்,குடியியல் மற்றும் நிர்வாகச் சட்டங்களையே சட்டத் தொழில் புரிபவர்கள் நாடுவது வழக்கம்.அவைகள் இலகுவாகக் கற்கள் கூடியவைகளும் கூட.ஆனால் அரசியலமைப்புச் சட்டம் கற்பதற்கு கடினமான சட்டக் கோட்டபாடுகளைக் கொண்டிருக்கும் அதே வேளை வருமானம் ஈட்டித் தரும் துறையுமல்ல.அதனால் அதனை யாரும் விரும்புவதில்லை.

அரசியல் அமைப்பு மாற்றம், அதிகார பரவலாக்கம்,ஆட்சிமுறைகள் பற்றிய கோட்பாடு மற்றும் பிரயோக அறிவுப்புலமை உள்ள சகோதரர் வை எல் எஸ் ஹமீத் அவர்கள் நமக்குள்ளே வாழும் இன்னுமொரு சுமந்திரனாக இருந்திருக்க வேண்டும் .

ஏனெனில் அன்று தமிழ் மக்களின் அரசியல் முன்னெடுப்புக்களை வடிவமைப்பதற்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் இருப்பதினைப் போன்று நமக்குள்ளே இவர் இருந்தும் நாம் இவரைப் பயன்படுத்திக் கொள்ள முஸ்லீம் அரசியலின் மோசமான புரிதல்கள் இடமளிக்கவில்லை என்பது வேதனையானது.

குறிப்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைமை இவரைப் பாராளுமன்றத்துக்குள் கொண்டு சென்றிருந்தால் அது அவருக்கும் அவரது கட்சிக்கும் அழியாய் புகழைத் தேடித் தந்திருக்கும் என்பதில் மாற்றுக கருத்தில்லை.

அரசியலமைப்பு மாற்றம் ,முஸ்லீம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம்,காணிப்பிணக்குகள்,கலாச்சார உரிமை மீறல்கள்,அத்துமீறல்கள்,மனித உரிமை மீறல்கள்...இப்படிச் சிக்கித் தவிக்கும் இக்காலத்தில் இவரைப் போன்ற அறிவுப்புலமும் சிந்தனைப் புலமும் கொண்டவர்கள் காலத்தின் தேவை.

இவரது முகநூல் பதிவுகளில் ஒளிந்து கிடைக்கும் சமூகம் சார்ந்த இவரது கவலைகளையும் புரிதல்களினையும் பார்க்கும் பொழுது இவர் இந்த நாட்டுச் சட்டமன்றத்தில் இருந்திருக்க வேண்டியவர் என அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.

இருந்தாலும் நமக்குள்ளும் இப்படியான மனிதர் ஒருவர் சமூக அக்கறையுடனும் கவலையுடனும் வாழ்கிறார் என்பதை ஏதோ ஒருவகையில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சகோதரர் வை எல் எஸ் ஹமீத் அவர்களின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகின்றேன்...பிரார்த்திக்கின்றேன்...!Ranoos Muhammath Ismail
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -