நிர்மாணிப்பதற்கு இந்திய அரசு உதவி
அஷ்ரப் ஏ சமத்-ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு 100 கிராமம் நிர்மாணிப்பதற்கு இந்திய அரசு ஒவ்வொரு வீட்டுக்கும் 7 இலட்சம் நன்கொடையகாக நிதி வழங்கி வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று வடக்கில் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனினால் 20 ஆயிரம் வீடுகளை ஹெபிடாட்ட நிறுவனம் ஊடகவும் மேலும் இந்திய அரசின் வட கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்க்பபட்ட மக்களுக்கு 50 ஆயிரம் அமைக்கும் வீட்டுத் திட்டங்கள். நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
அமைச்சா் சஜித் பிரேமதாசாவினல் நாடு முழுவதிலும் 150 வீடமைப்புக் கிராமங்கள் திறக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. . மேலும் 1000 கிராமங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு் நிர்மாணப் பணிக்ள மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..
மலையக மக்களுக்கான வீடுகளை மலையக அபிவிருத்தி உட் கட்டமைப்பு அமைச்சா் பழனி திகாம்பரத்தினால் முன்னெடுக்கப்பட்டு்ள்ளது தோட்டங்களில் இலவசமாக 6 பேர்ச் காணியும் தனி வீடுகள் மற்றும் இந்திய அரசின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
கொழும்பில் - மெகா பொலிஸ் மாநகர சபைகள் மற்றும் மேல் மாகண அபிவிருத்தி அமைச்சா் சம்பிக்க ரணவிக்கவினால் முன்னாள் பாதுகாப்புச் செயலாளா் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட 19 தொடா்மாடி வீடமைப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு இதுவரை 5 தெடா்மாடி வீட்டுத் திட்டங்கள் திறக்கப்பட்டுள்ளன. கொழும்பில் தோட்டங்கள், முடுக்கு வீடுகளில் வாழ்ந்தவர்களை நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இனம் கண்டு ஒரு சான்றிதழை வழங்கியுள்ளது மேலும் தொடா் மாடி வீடுகள் நிர்மாணிக்க அவா்களது வீடுகளை உடைக்கப்பட்ட அவ்வாறான குடும்பங்களுக்கு மட்டும் இத் தெடா்மாடி வீடுகள் பகிா்ந்தளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் கொழும்பில்் வாழும் 75 ஆயிரம் அதிகமான மத்திய தர வா்க்கத்தினருக்கு இதுவரையும் தொடா் மாடி வீடுகள் நிர்மாணிக்கப்படவில்லை.
நாளாந்தம் பெண்களும், ஆண்களும், குடும்பத் தலைவா்களும் வயது முதிா்ந்தோா்களும் தமக்கென்று ஒரு வீட்டினைப் பெற்றுக் கொள்ள வீடமைப்பு அமைச்சு, மற்றும் மெகா பொலிஸ் அமைச்சுக்களின் படிக்கற்களில் ஏறி, இறங்கி கலைத்துப் போயுள்ளனா்.. மறைந்த ஜனாதிபதி ஆர் பிரேமதாசாவினால் கொழும்பு வாழ் மக்களுக்காக அவா் முன்னெடுத்த வீட்டுத் திட்டங்களுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசும் இது வரை கொழும்பு வாழ் மக்களின் வீட்டுப் பிரச்சினைகளுக்கு தீா்வு காணவில்லை.
கொழும்பில் வாழ்வோா் மாதாந்தம் உழைக்கும் பணத்தினை வீட்டு வாடகையும் முற்பணம் செலுத்தியும் ஒடுங்கி ஓடாகியும் நோயாளியாகிவிட்டோம் .என்கின்றனா். கொழும்பு வாழ் மக்கள் தமக்கென்று ஒரு சொந்தமான வீடு இல்லாமால் படும் அவலங்களையும் துன்பங்களையும் சொல்லி சொல்லி கண்னீா் மல்க பல சோகக் கதைகளைக் சொல்கின்றனா்.
கொழும்பு வாழ் மத்திய தர வர்க்கத்தினருக்கு காலம் சென்ற ஜனாதிபதி ஆர் பிரேமதாச அமைத்துக் கொடுத்த தொடா்மாடி வீட்டுத் திட்டங்கள் போன்று மீளவும் கொழும்பை அன்டிய பிரதேசங்களில் வீடுகள் நிர்மாணிக்கப்படல் வேண்டும். ஆரம்பக் கொடுப்பணவாக 5 இலட்சத்தினையாவது பெற்று 15 ,25 வருடங்களுக்கு மாதாந்தம் 10ஆயிரம் ருபாவினையாவது செலுத்தக்கூடிய தொடா்மாடி வீடுகளை அரசாங்கம் உடன் நிர்மாணித்துக் கொடுக்க முன் வருதல் வேண்டும்.
அமைச்சா் சஜித் பிரேமதாசவுக்கு கொழும்பு மாவட்டத்தில் வீடுகட்டுவதற்கு தனது அமைச்சின் கீழ் ஒர் அங்குலமேனும் காணி இல்லை. கொழும்பு வீட்டுத்திட்டத்திற்குரிய பொறுப்பு தனக்குத்தரப்படவில்லை. கிராமங்களில் உதாகம வீட்டுக் கிராமங்கள் நிர்மாணிப்பதற்கும் வீட்டுக் கடன் வழங்கி வீடுகளை கட்டுவதாக அவா் சொல்கின்றாா். அமைச்சா் சம்பிக்க ரணவக்கவிடம் வீடொன்றினை பெற்றுக்கொள்ள மனு ஒன்றை எடுத்துக் கொண்டு சென்றால் அவா் முடுக்கு வீடுகளில் வாழ்ந்தவா்களை நகர அபிவிருத்தி அதிகார சபை அடையாளம் கண்டு அவா்களுக்கு ஒரு பத்திரம் வழங்கியிருக்கும் , வீடு உடைத்தவா்களுக்கு அவ்விடத்தில் தொடா்மாடி நிர்மாணித்தால் அவா்களுக்கே எமது அமைச்சு தொடா் மாடிவீடுகளை நிர்மாணிக்கின்றது. வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சே மத்திய தர வா்க்கத்தினருக்கு வீடுகள் தரவேண்டும் அங்கு சென்று கேளுங்கள் என அவா் கூறுகின்றாா். அவ்வாறானால கொழும்பில் வீடடற்ற 75ஆயிரம் குடும்பங்கள் மற்றும் கொழும்பை அண்டிய நகரங்களில் வாழும் குடும்பங்களும் . யாா் வீடு கட்டுவது ? அந்த மக்களினர் வீட்டுப் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி பிரதமா் சம்பந்தப்பட்ட அமைச்சா்கள் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணா்கள் இவ் விடயத்தில் உரிய கரிசனை செலுத்தி உடன் இம் மக்களது வீட்டுப் பிரச்சினைக்கு உடன் தீா்வு காணுதல் வேண்டும்.

