"துரித கிராமிய வசந்தம்-2020" எனும் திட்டத்தின் மூலம் திருகோணமலை மாவட்டம் முழுவதும் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார் செவ்வாய்கிழமை காலை மூதூரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், "துரித கிராமிய வசந்தம்-2020" என்ற பெயரில் 2020 ஆம் ஆண்டை இலக்காக கொண்டு புதிய அபிவிருத்தி திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளேன்.
இத்திட்டத்தின் மூலம் பல்வேறு அமைச்சுக்கள், உள்நாட்டு வெளிநாட்டு அரச, அரச சார்பற்ற நிறுவனகளின் ஊடாக நிதிகளை பெற்று திருகோணமலை மாவட்டம் முழுவதும் அனைத்து துறைகளிலும் உட்கட்டமைப்பு ,பௌதீக, ஆளணி வசதிகள் மேம்படுத்தப்பட்டு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதுவரை இந்த திட்டத்துக்கு பல்வேறு அமைச்சுக்களில் இருந்து 466.5 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. 2020 வரை முன்னெடுக்கப்படவுள்ள இந்த திட்டத்துக்கு பல அமைச்சுக்கள் தொடர்ச்சியாக நிதியை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளன என தெரவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -