போட்டியில் வயது வித்தியாசமின்றி அனைவரும் பங்குபற்ற முடியும். இப் போட்டியில் பங்குபற்றுவதன் மூலம் தேடல் அறிவைப் பெறுவதுடன் வினாக்களுக்கு விடையளிக்க முற்படும்போது பலநூறு விடயங்களை எம்மால் இலகுவாக கற்றுவிடமுடியும்.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் பணிப்பாளரிடம் வினவிய போது;
இது எமது நான்காவது போட்டியாகும். இதுவரை நடாத்தப்பட்ட போட்டிகளில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது.
ஆனால் இம்முறை நடைபெறும் போட்டி சற்று வித்தியாசமான முறையில் ஸ்மார்ட் தொலைபேசிகளினூடாக நடைபெறுகின்றன.
இது எமது தேச தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சியாகும், இதுவரை இவ்வாறானதொரு முயற்சி எமது நாட்டில் எங்கும் நடைபெறவில்லை, இது, நவீன கற்றலின் வடிவமாகும், இதன் மூலம் பயனற்ற ஸ்மார்ட் தொலைபேசி பாவனையிலிருந்து சமூகத்தை மாற்றி அறிவுத்தேடலின் பக்கம் கொண்டு சேர்க்கும் பாரிய முயற்சியாகும், வெற்றியீட்டும் போட்டியாளர்களுக்கு பணப் பரிசீல்களும் பெறுமதிமிக்க சான்றிதழ்களும் வழங்கப்படும். என Mbnsoft Technologyநிறுவனத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
அத்துடன் எம்மை தொடர்பு கொண்டு உங்கள் பெறுமதியான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை குறிப்பிட்ட மென்பொருளின் About பகுதியில் உள்ள Feedbackமூலமாக தெரிவிக்க முடியும். எனவும் போட்டி விதிமுறைகள் மற்றும் போட்டி விபரங்கள் மென்பொருளில் பெற்றுக்கொள்ள முடியும், எனவும் அவர் குறிப்பிட்டார்.
இம் மென்பொருளை உங்கள் ஸ்மார்ட் தொலைபேசியிலுள்ள Google Play Store யில் பெற்றுக்கொள்ள முடியும்..
அல்லது இவ்விணைப்பின் மூலம் நேரடியாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.
Multi Knowledge App link https://play.google.com/store/apps/details?id=com.mbnsoft.multiknowledge