தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆங்கில டிப்ளோமா மற்றும் சான்றிதழ் பயிற்சி நெறிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்களின் ஆலோசனையின் கீழ் நடவடிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஆங்கில மொழித் துறைத்தலைவர் கலாநிதி ஏ.எம்.எம். நவாஸ் தெரிவித்தார்.
இப்பயிற்சி நெறிகள் பல வருடங்களாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்டு வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆங்கில டிப்ளோமா பயிற்சி நெறி ஒரு வருடகால கற்கை நெறியையும், சான்றிதழ் பயிற்சி நெறி ஆறு மாத கால கற்கை நெறியையும் கொண்டிருக்கும். இவ்விரு பயிற்சி நெறிகளுக்கும் மாணவர்கள் இரு மாத காலத்துக்குள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -