கிழக்கு இளைஞர்கள் அமைப்பு-ஸ்ரீலங்கா மற்றும் எமினேனஸ்
நிறுவனத்துடன் இணைந்து அம்பாறை மாவட்ட இளைஞர்களுக்கு ஏற்பாடு செய்த இலவச தலைமைத்துவம் மற்றும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு கடந்த .(09 )ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் அமைப்பின் ஸ்தாபக தலைவரும், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான தாணீஷ் றகுமத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் ஆலோசனை சபை பணிப்பாளர் நிசாம் மாயல், எமினேனஸ்( EMINENCE )நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.ஏ.எம்.மாஹிர், கிழக்கு இளைஞர்கள் அமைப்பு
அமைப்பின் செயலாளர் முபாரக் முஸ்தபா, எமினேனஸ் நிறுவனத்தின் ஆலோசகரான பொறியலாளர் நியாஸ், பொறியலாளர்
றிஷாட், கிழக்கு இளைஞர்கள் அமைப்பின்
அமைப்பின் பிரதி தலைவர் ஏ.சிநெளஷாத், பொருளாலர் இமாஸ் முஹம்மட், பிரதி செயலாளர் முபாஸித் அல்பதாஹ், தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.அப்துல் மஜீட், தேசிய மகளிர் அமைப்பாளர் சாஹிறா இஸ்மாயில், உதவி தலைவர் நந்தினி மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள், இளைஞர்,யுவதிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.மேலும் இவ் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கத்து.





