முஸ்லீம் சமூகத்தின் உரிமைகளை பெற்றுக்கொள்ள எவ்வித வீட்டுக் கொடுப்புக்கும் நாம் தயார் - கல்முனை மேயர் ஏ. றக்கீப்


பாறுக் ஷிஹான்-
முஸ்லீம்களின் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக நாம் ஓரணியில் திரள வேண்டும் சதிகளுக்குள் சிக்கி சமூகத்தை சீரழிக்க முற்படக்கூடாது என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ. றக்கீப் தெரிவித்தார்.

கல்முனை விருந்தினர் மண்டபத்தில் இன்று(24) மு.கா பிரதித்தலைவரும் அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி தலைமையில் இடம்பெற்ற ஊடக கலந்துரையாடலிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்துக்களை தெரிவிக்கையில்
முஸ்லீம்கள் இரண்டு பெரும்பான்மைகளுக்குள்ளும் சிக்கிச் சீரழிகின்ற ஒரு காலகட்டத்தில் முஸ்லிம்களுக்குள் அரசியல் போர்வை மூலமாக ஒரு திசை திருப்பலை மேற்கொள்ளுகின்ற ஒரு அரசியல் முன்னெடுப்பு தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இதை புரிந்து செயல்பட வேண்டியது அரசியல் சிந்தனை கொண்ட எல்லோரதும் கடமையாகும்.
அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மை முஸ்லீம்கள் உள்ள போதும் முஸ்லீம்கள் இம்மாவட்டத்தில் மிக மோசமாக அடக்கு முறைகளுக்குள் உள்வாங்கியிருப்பதானது மிக மோசமான அரசியல் நிலைமைகளை நமக்கு அடையாளம் காட்டி இருக்கிறது. இருப்பினும் முஸ்லீம்கள் மிக பொறுமையாகவே இந்நாட்டில் வாழ்ந்து வருகின்றார்கள். இருப்பினும் ஆரோக்கியமான சிந்தையில் மூலமாக நாம் நமது தேவைகளை அடையாளம் காட்ட வேண்டிய கட்டாயம் இப்போது எழுந்துள்ளது. அதனை சரிவர புரிந்து நடந்து கொள்ள வேண்டிய கடப்பாடு நமக்குள்ளது.
விசேடமாக முஸ்லீம்களின் காணிவிவகாரங்கள் மிக அழகாக திட்டமிடப்பட்டு நகர்த்தப்பட்டு நமது மக்கள் பழி வாங்கப்பட்டுள்ளார்கள். இதனை நமது மக்கள் புரிந்து செயற்படல் அவசியமானது. என்பதையும் கூறிக்கொள்கிறேன் என்கிறார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -