நஸ்புல்லாவின் கவிதைகள் துறையூரில் வெளியீடு

ஹுதா உமர்.-
கிழக்கு மாகாணம்,கிண்ணியாவை சேர்ந்த கவிஞர் ஏ.நஸ்புல்லாவின் "நஸ்புல்லாஹ் கவிதைகள்" எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று காலை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மண்டபத்தில் எழுத்தாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி செயலாளருமான மன்சூர் ஏ காதிர் தலைமையில் நடைபெற்றது.

வரவேற்புறையை கவிஞர் ஜெமீல் நிகழ்த்தினார்,தலைமையுரை நிகழ்த்திய நிகழ்வின் தலைமை மன்சூர் ஏ காதிர் அவர்கள் நூலாசிரியரின் கடந்த கால படைப்புகள் பற்றி பேசியதுடன் சுவாமி விபுலானந்த அடிகளாரினதும், பிராந்திய கவிஞர்கள் நிகழ்த்திய தமிழ் சாதனைகள் பற்றி எடுத்துரைத்தார்.

தே. கி.பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அம்ரிதா (ஏ.எம். றியாஸ்) அவர்கள் மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல்கள், மொழிபெயர்ப்பாளர்களுக்கும் பிராந்திய கலாச்சாரங்களுக்கும் உள்ள தொடர்புகள் பற்றியும் இன்றைய தினம் வெளியாகும் குறித்த புத்தகத்தில் உள்ள சில சருக்கள் பற்றியும் தனது உரையில் பேசினார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் கவிஞர் சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ் (அலறி) அவர்கள் முதல்பிரதியை பெற்றுக்கொண்டார் கவிஞர் சோலைக்கிளி,கவிஞர் விஜிலி,எழுத்தாளர் நவாஸ் சௌபி,என பல கவிஞர்,எழுத்தாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -