நூற்றாண்டினை கடந்த வருடம் வெகு விமர்சையாக கொண்டாடி அந்த ஆண்டில் உயர்தர வைத்திய துறை ,பொறியல் துறை வர்த்தக கலை பிரிவு மற்றும், சாதாரனதரம் என என்றும் இல்லாதவாறு சாதனை படைத்த ஓட்டமாவடி மத்திய கல்லூரியானது., இன்றுமுதல் தடவையாக கிக்கட் போட்டியில் மாகாண மட்டத்தில் தெரிவாகி தேசிய மட்ட போடிகளுக்கு தெரிவாகியுள்ளமை கல்குடா மண்ணுக்கு கிடைத்த பெறும் வெற்றியாகவே பார்க்கப்படுவதோடு கல்லூரியானது கல்வியில் மட்டுமல்லாது விளையாட்டு துறையிலும் சாதிக்க கூடிய பாடசாலை என எடுத்துக்காட்டியுள்ளது.
மாவட்டம், மாகாணம் என பல தடைகளை தாண்டி இம்மாதம் .07,08ம் திகதிகளில் குருநாகல் கிரியுள்ள விளையாட்டு மைதானத்தில் இடம் பெறவுள்ள தேசிய மட்ட போட்டிகளுக்கு குறித்த கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளமை ஏற்கனவே குறிப்பிட்டதனை போன்று கல்குடாவிற்கு கிடைத்துள்ள மகத்தான வெற்றி என்பதற்கு அப்பால் கல்லூரியின் அதிபர் ஹலீம் இஸ்ஹாக் மற்றும் முன்னாள் அதிபரும் தற்போதைய வலய கல்வி பணிப்பாளருமான ஜுனைட் ஆகியோருடைய நிருவாக திறமையினால் கிடைக்கப்பெற்ற வெற்றியாகவும் [பயிற்ரு விப்பாளர்களின் திரமையான பங்களிப்பாகவும் பார்க்கப்படுவது மூடி மறைக்க முடியாத எதார்த்தமாக உள்ளது.
அந்த வகையில் தேசிய ரீதியிலான கிரிக்கட் போட்டியில் பங்கு பெற்றவுள்ள ஓட்டமாவடி தேசிய கல்லூரிக்கு பழைய மாணவர் சங்கம், பெற்றோர்கள், கல்விமான்கள் விளையாட்டு பிரியர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் அதே நிலையில் முதற்தடவையாக தேசிய கிரிக்கட் போட்டியில் பங்கு பெற்றும் ஓட்டமாவடி மத்திய கல்லூரி சகல போட்டிகளிலும் வெற்றி பெற்று மகுடம் சூட இறைவனை பிராத்திப்பதாக பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…