எம்.என்.எம்.அப்ராஸ்-
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்ப்பட்ட சில பகுதிகளில் மின் கம்பங்களில் உள்ள மின் குமிழ்கள் சில ஒளிராமல் காணப்படுகின்றது. குறிப்பாக கல்முனை பிரதான வீதியில் தரவைப்பிள்ளையார் முன்பாகவுள்ள கல்முனை நகருக்குச்செல்லும் மின் கம்பங்களின் உள்ள சில மின் குமிழ்கள் ஒளிராமயினால் அப் பகுதியின் ஊடாக பயணம் செய்யும் பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். எனவே இது தொடர்பாக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இவ் விடயத்தில் கவனமெடுத்து ஒளிராமல் இருக்கும் மின்குமிழ்க்ளை மாற்றியமைத்து இப் பகுதியை ஒளியிட்டுமாறு பொது மக்கள் கேட்டுள்ளனர்.