சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் மூன்று வீதிகளின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்

எம்.எம்.ஜபீர்-
சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் 60 இலட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படவுள்ள மூன்று வீதிகளின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் சேவைகள் அமைச்சின் இணைப்பாளர் அஸ்வான் மௌலான தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கல்முனை தொகுதி ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரும் கல்முனை தொகுதி அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் றஸ்ஸாக் கலந்து கொண்டு வீதியின் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.
இவ்வீதி நீண்டகாலமாக குன்றும் குழியுமாகவும் காணப்படுவதினால் மழைக்காலங்களின் பிரதேச மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்குவதை கவனத்தில் கொண்டு கல்முனை தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரும் கல்முனை தொகுதி அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் றஸ்ஸாக் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் காசீமிடம் விடுத்த வேண்டுகோளையடுத்தே இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிதியின் மூலம் சாய்ந்தமருது - 17 கே.கே. வீதி, சாஹிறா கல்லூரி முதலாம் குறுக்கு வீதி, வொலிவேரியன் முதலாம் குறுக்கு வீதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.ஐ.ஏ.அஸீஸ், எம்.என்.றிஸ்மிர், சாய்ந்தமருது பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஜௌபர், பிரதேச முக்கியஸ்தர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
























எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -