இரவு பகல் பாராமல் இந்த அல்லலுற்ற மக்களின் விடிவுக்காக தலைவர் அஷ்ரப் பட்ட கஷ்டங்களும் தியாகங்களும் இந்த சமூகத்தின் விடிவுப்பாதையில் நம்பிக்கை கிரணங்களை பெருமளவு விட்டுச் சென்றுள்ளது.
அரசியல் அடிமைகளாக அனாதைகளாக துயருற்ற சிறுபான்மை சமூகமொன்றின் துயர் துடைக்க தன்னை அர்ப்பணித்த ஒரு தியாகியின் போராட்டங்களும்,செயற்பாடுளும் எமக்கு முன்னுள்ள பொறுப்பான முன்னுதாரணங்களாகும்.
இடம்பெயர்ந்த முஸ்லிம் சமூகத்திற்கு அவர் செய்த சேவைகள மறக்கபபட முடியாதவைகளாகும்.
தன்னந்தனியே நின்று அவர்செய்த பெருஞ்சேவைகள் காலத்தின் கரங்களிலே இன்னும் கவர்ச்சியாகவே காட்சியளிக்கின்றன.
நிதானமாகவும் தேவையுடையோருக்கும் ஆதர்சமாக பணிகள் பல செய்த
அவர் வகித்த புனர்வாழ்வு அமைச்சின் அதிகாரங்களை அல்லாஹ்த்தஆலா இன்று எம் வசம் ஒப்படைத்திருக்கிறான்.
அந்த தலைவனின் சேவைவழியில் நின்று செயற்படுவது நாம் அடைந்த பாக்கியமாக மாத்திரமன்றி
நிகழ்கால,எதிர்கால எமது சந்ததிகளின் சுபீட்சமான வாழ்வுக்காக எம்மீது சுமத்தப்பட்டுள்ள பாரிய பொறுப்புமாகும்.
யா அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தெளஸை வழங்குவாயாக.
அல்லாஹும் மர்பிர்லஹு வர்ஹம்ஹு.
கெளரவ அல் ஹாஜ் காதர் மஸ்தான் எம்.பி,
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம்,மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சரும்.